ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள காசியா தண்ட் பகுதியில், உள்ள ஒரு கோயிலில் வைக்கப்பட்டிருந்த அனுமன் சிலை மற்றும் சிவலிங்கம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கோயிலின் கருவறையில் இருந்த ஹனுமான் சிலை மற்றும் சிவலிங்கம் ஆகியவை, ஒரு பெரிய கல்லால் அடித்து நொறுக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு வெளியே எடுத்து வீசப்பட்டுள்ளது. கோயிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலமும் சேதமடைந்துள்ளது. இந்தத் தகவல் அறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இப்பகுதி போதைக்கு அடிமையானவர்களின் கூடாரமாக இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, கடந்த ஆண்டு, ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்தில், ஜாம்திஹா பஞ்சாயத்து பகுதியின் குப்ரிதாண்டில் உள்ள ஹனுமான் கோயில் சேதப்படுத்தப்பட்டது. அனுமன் சிலையுடன், சிவலிங்கமும் உடைந்த நிலையில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.