காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் வழிகாட்டுதலில் துவக்கப்பட்டுள்ள கிராம பாதுகாப்புக்குழு மூலம் சிறுகோயில்கள், விவசாய நிலங்கள் பராமரிக்கப்படும்’ என தமிழ்நாடு பிராமணர் சங்க (தாம்ப்ராஸ்) மாநிலத்தலைவர் ஹரி ஹரமுத்தய்யர் கூறினார்.
அவர் கூறியதாவது: மதுரை தேனுார் வந்த விஜயேந்திரரை பொதுச் செயலர் ரமேஷ்குமார் சர்மா, அமைப்பாளர் ஸ்ரீராமன், செயலர் சந்திரசேகரன், மதுரை மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், பிராமண கல்யாண மகால் தலைவர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் சந்தித்தோம்.விஜயேந்திரர் மூலம் கிராம பாதுகாப்புக்குழு துவக்கப்பட்டு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். ‘கிராமங்களில் சிறுகோயில்களையும் பராமரித்து பூஜை செய்ய வேண்டும். விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். இந்து மதத்தின் சிறப்புகளை எடுத்துரைக்க வேண்டும்’ என விஜயேந்திரர் வலியுறுத்தினார். அவரது அறிவுரைகளை செயல்படுத்துவோம்.இவ்வாறு கூறினா