பயங்கரவாத தொடர்பில் இருந்த இளைஞர்களை NIA கிடுக்கு பிடி

இலங்கையில் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பை தொடர்ந்து கோவையில் ஜூன் 12ல் தேசிய புலனாய்வு முகமை எனும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆறு நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தி முகமது அசாருதீன் 32 ஷேக் இதயதுல்லா 30 உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.ஆகஸ்ட் 29ல் கோவையில் உள்ள சனாபர் அலி 24, உமர் பாரூக் 32, சமேசா முபின் 27, முகமது யாசீர் 26, சதாம் உசேன் 27 வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.கேரள சிறையில் உள்ள முகமது அசாருதீன், ஷேக் இதயதுல்லா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சமீபத்தில் ‘கஸ்டடி’ எடுத்து விசாரித்தனர்.

கோவை உக்கடத்தைச் சேர்ந்த சமீர் 22, சவுரூதீன் 30 ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதன் அடிப்படையில் இருவரது வீடுகளில் நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தி மின்னணு ஆவணங்களை கைப்பற்றினர். இருவரிடமும் விசாரணை நடக்கிறது.சமீர் பட்டதாரி; தனியார் நிறுவன ஊழியர். சவுரூதீன் 2 மாதங்களுக்கு முன் சென்னையில் இருந்து கோவை வந்து உக்கடம் லாரி பேட்டையில் டிபன் கடை நடத்துகிறார்.நாகூர்நாகை, நாகூர் மியான் தெருவைச் சேர்ந்தவர் முகமது அஜ்மல் 23. திருவிழா நேரங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரி. இவரது வீட்டில் நேற்று காலை கொச்சி என்.ஐ.ஏ. – டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் மூவர் மற்றும் உள்ளூர் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.முகமது அஜ்மல் பயன்படுத்திய அலைபேசி ஒரு சிம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதோடு விசாரணைக்காக முகமது அஜ்மலை அழைத்துச் சென்றனர். நாகை போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடந்து வருகிறது.இந்து முன்னணி பிரமுகர் கொலை; முக்கிய இடங்களில் குண்டு வெடிப்பு நடத்த சதி திட்டம் தீட்டியது போன்ற சந்தேகங்களின் அடிப்படையில் முகமது அஜ்மலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இளையான்குடிசிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த நுார் முகம்மது மகன் சிராஜூதின் 22 என்பவரிடமும் விசாரணை நடந்தது. சாலையூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று அதிகாலை 5:30 வந்த ஆய்வாளர் சுபிஷ் தலைமையிலான 3 பேர் சிராஜூதினின் அலைபேசிக்கு வந்த அழைப்புகள் குறித்து விசாரணை நடத்தினர். ஒரு மணிநேரம் விசாரணை நடந்தது. பின் அவரிடமிருந்த அலைபேசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்றுள்ளனர்.காயல்பட்டினம்துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கே.டி.எம். தெருவை சேர்ந்த ரிபாய்தீன் மகன் அபுல் ஹசன் சாதூலி 27. கார் டிரைவர். நேற்று காலை 6:00 மணியளவில் சாதுாலியின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நான்கு மணி நேரம் நடந்த சோதனையில் ஒரு அலைபேசி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.சோதனையின் போது சாதூலி வீட்டில் இல்லை. சென்னையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அளித்துள்ளனர்.திருச்சி உட்பட ஆறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் இரண்டு லேப்டாப், எட்டு அலைபேசிகள், ஐந்து சிம் கார்டு, ஒரு மெமரி கார்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.