தனியார் தொலைக்காட்சி நிருபர் மோஸஸ் சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுள்ளார். இதற்கு கண்டனத்தை ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் மான்கறி குறித்து சில தகவல்களை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனுக்கு வரும் தொடர் கொலை மிரட்டல்களுக்கு ஸ்டாலின் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
மோஸஸ் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்தான். ஆனால் சிறுபான்மையினர் என்றால் உருகுவதும், ஹிந்துக்கள் என்றால் கண்டுகொள்ளாமல் இருப்பதும், அவமானப்படுத்துவதும்தான் ஸ்டாலினின் தொடர் நடவடிக்கையாக உள்ளதைதான் ஏற்க முடியவில்லை.