சிறப்பு அந்தஸ்து 370 ரத்து- மகிழ்ந்து கொண்டாட காரணங்கள் பத்து

எழுபது ஆண்டுகள் கால களங்கம் போச்சே. தற்காலிகம் என்று சொல்லி எத்தனை நாட்கள் காஷ்மீர் மக்களுக்கும் ஒட்டுமொத்த பாரத நாட்டவர்க்கும் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்வது? பாரத அன்னையின் குழந்தைகள் நாமெல்லாம் இந்த ரத்து 370 நீக்கத்தை வரவேற்க பத்து காரணங்கள்:

01) ஒரே நாடு ஒரே அரசியலமைப்பு சட்டம். (ஏக் ஜண்டா ஏக் அஜெண்டா – ஒரு கொடி ஒரு சிந்தனை )

02) எல்லோரும் ( பாரத மக்கள் ) சமம் என்பது உறுதியாச்சு – குடியேற, பணிபுரிய, வாணிபம்செய்ய, சொத்து வாங்க.

03) பாரத நாடாளுமன்றம் இயற்றிய சட்டம் ஜம்மு – காஷ்மீரில் (ஜ-கா) செல்லுபடியாகும்.  பாரத பாஸ்போர்ட் வைத்துக்கொண்டே ஷரியா சட்டம் பேசிய வாய்களுக்கு பூட்டு.

04) ஜகா மாநில மல்ல – இப்போதைக்கு யூனியன் பிரதேசம்

05) ஜகா சட்டசபை ஆயுள் (இயல்பு சூழ்நிலை மீட்டெடுக்கப்பட்ட பின்னர் ) தமிழ்நாட்டைப் போல கேரளாவைப் போல 5 ஆண்டுகள்தான்.

06) கவர்னருக்கு முழு பொறுப்பு- பயங்கரவாதிகள் முதுகெலும்பு முறிப்பு

இராணுவ வீரனை இழித்துப் பேசி கல்லெறிந்த பயங்கரவாதிகள் மிடி (மிகுந்த) பயம் கொள்ளுவார்

07) தகவல் உரிமைச் சட்டம் அங்கு இனிமேல் உங்கள் உதவிக்கு வரும் (நம்மூர் டூமீல்ஸ் போராளீஸ் கவனத்திற்கு)

08) மாதர் தமக்கு சொத்துரிமை மறுத்த மடமை போச்சே (ஜனநாயகம் ஜனநாயகம் என்று கூவும் மாதர்களே காதில் விழுந்ததா?)

09) தமிழ்நாட்டிலிருந்து பணி நிமித்தம் குடியேறும் சுடலைக்கும் பாண்டியனுக்கும் முத்துக்கும் வாக்குரிமை உண்டே.

10) எல்லாவற்றிற்கும் மேலாக, காஷ்மீரி சகோதரனுக்கும் சகோதரிக்கும் இனிமேல் தரமான கல்வி- மருத்துவம்- வேலைவாய்ப்பு- வளர்ச்சி உண்டு; ஊழலில் இருந்து விடுதலை.