மாநில அரசால் விசாரிக்க முடியாத பல விசாரணைகளை சி.பி.ஐ வெற்றிகரமாக விசாரிக்கும்.
சி.பி.ஐ விசாரணையை பலர் கேட்பதும், சி.பி.ஐ என்றாலே சிலர் அலருவதும் உண்டு.
மகாராஷ்டிராவில் சி.பி.ஐ விசாரணையால், ஆளும் சிவசேனா கூட்டணியினர் பலர் தர்மசங்கடத்திற்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்க மகாராஷ்டிர அரசு தற்போது இனி சி.பி.ஐ விசாரணையை தங்கள் மாநிலத்தில் அனுமதிப்பதில்லை என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஒரு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க மாநில அரசின் அனுமதி வேண்டும் எனும் சட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது சிவசேனா.