சிதம்பரம், கார்த்தி சரிகிறது சாம்ராஜ்யம்

பசி வந்தா பத்தும் பறந்து போகும்னு சோல்வாங்க. இந்த.சிவந்ததில் பறந்து போன நல்ல விஷயங்கள் ரொம்பவே அதிகம். .சிதம்பரத்தின் நிதி முறைகேடுகளை எண்ணில் அடங்காது. அவரது புத்திர ரத்தினம் நடத்திய லீலைகள் அம்பலமாக அம்பலமாகத்தான் சிதம்பர ரகசியம் வெளிச்சத்திற்கு வரும்.

மகாபாரதத்தில் பல கிளைக் கதைகள் உண்டு. சிதம்பரத்தின் கதையும் பெருங் கதை தான். திருதராஷ்ட்ரன் பிள்ளைப் பாசத்தால் தவறிழைத்தான். இந்தக் கதையில் சிதம்பரத்தின் தவறுகளுக்கு மகன் கார்த்தி ஒத்துழைத்தார். இதிலும் பல கிளைக் கதைகள் உண்டு. எங்கு தொடங்குவது என்பதில் குழப்பம் இருந்தாலும் 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆரம்பிக்கலாம். அவர்களின் கதை அநேகமாக அதில் தான் முடியப் போகிறது.

ஏர்செல் – மாக்ஸிஸ்

உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி நன்கு செயல்பட்டுக் கொண்டிருந்த ஏர்செல் நிறுவனத்தை மாக்ஸிஸ் என்ற மலேசிய நிறுவனத்திற்கு விற்க வற்புறுத்தியதில் தொடங்குகிறது ‘ஏர்செல் – மாக்ஸிஸ்’ வழக்கு. ‘2ஜி அலைக்கற்றை’ வழக்கில் இதுவும் ஒரு கிளைக் கதை. விடை தெரிந்த விடுகதை.

மாக்ஸிஸ் நிறுவனம் தனது விசுவாசத்தைக் காட்ட சன் டிடிஹெச் (Sun DTH) நிறுவனத்தில் பெரும் முதலீடு செதது. கருப்புப் பணத் தடுப்பு வழக்கின் கீழ் இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

போலி நிறுவனங்கள்,  21 ரகசிய வங்கிக் கணக்குகள், பினாமி நபர்களின் பெயர்களில் 14 வெளிநாடுகளில் 25 சோத்துக்கள். வெளிவந்த அத்தனைக்கும் ஆதாரங்களைத் திரட்டி சிபிஐயும், அமலாக்கத் துறையும் விசாரித்து வருகின்றனர் அந்த பினாமி நண்பர்கள் தங்களது சோத்துக்களுக்கு வாரிசாக ‘கா.சி’யின் மகளைத் தான் நியமித்துள்ளனர்.

இத்தனை சோத்துக்களை சில்லறை விஷயங்களை முடித்துக் கொடுத்து சம்பாதித்திருக்க முடியாது. சிதம்பரம் அமைச்சராக இருந்த காலத்திற்கு முன்பிருந்தே எத்தனையோ பேரிடம் லஞ்சம் பெற்ற தொகையாகத் தான் இருக்கக் கூடும்.

பல முறை விசாரணைக்கு வரச் சோல்லி அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன. ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணம் சோல்லித் தட்டிக் கழித்தார் ‘கா.சி’. சோத்துக்களைப் பெயர் மாற்றுவது, விற்பது, நிறுவனங்களில் தனக்குள்ள பங்கை விட்டுக் கொடுப்பது எனப் பல தகிடுதத்தங்களைச் செதார். தன்னை ஒன்றும் செய முடியாது என்ற இறுமாப்பில் இருந்த போது தான், 1.16 கோடி ரூபா மதிப்புள்ள சோத்துக்களை அமலாக்கத் துறை கையகப்படுத்தி விட்டது. தவிர்க்க முடியாத சூழலில் இன்னொரு வழக்கும் எமனாக வந்தது.

இந்திராணி சந்திப்பு

‘ஐ.என்.எக்ஸ் மீடியா’ (ஐ‡ஙீ –ஞுஞீடிச்) நிறுவன இயக்குநர் இந்திராணி முகர்ஜி சர்ச்சைக்குரிய குற்றப் பின்னணி உடையவர். தனது வியாபார முறைகேட்டு வழக்கில் இருந்து விடுபட கா.சி” இடத்தில் பத்து லட்சம் லஞ்சம் தந்ததாக இவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் தான் ப.சி மகன் கா.சியை கைதாக வைத்தது.

தந்தை ப.சி செத தொழிலுக்குத் தரகு வேலை பார்த்த ‘கா.சி’யை மார்ச் 1-ஆம் தேதி கைது செதது சிபிஐ. விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணிக்க மாட்டேன், சிறை உணவைச் சாப்பிட மாட்டேன், போட்டிருக்கும் நகையைக் கழட்ட மாட்டேன், விசாரணைக்கு இம்மியளவும் ஒத்துழைக்க மாட்டேன் என்றெல்லாம் அடம்பிடித்தார் கார்த்தி. விசாரணைக் காவல் நீண்டு கொண்டே போனது. கஷ்டப்பட்டு சில ஆதாரங்களைக் கண்டு பிடித்தனர். இருக்கும் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என்பதால் ‘கா.சி’ பிணையில் வருவதை சிபிஐ எதிர்த்தது.

கைதாகிய பின்னரும் திமிராக சிபிஐ அதிகாரிகளைப் பார்த்து, நான் ஆட்சிக்கு வந்ததும் என்ன செகிறேன் பார்!” எனச் சவடால் விட்டார் ‘கா.சி’. தப்பே செயவில்லை என மார்தட்டி, கையுயர்த்திய கா.சி” இன்றளவில் தான் ஆதாரத்தை அழிக்கவில்லை எனவே பிணையில் வெளிவிடுங்கள் எனக் கெஞ்சினார். தீர்ப்புத் தேதியைக் குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தது தில்லி உயர்நீதிமன்றம். முதல் 12 நாட்கள் காவல் விசாரணை. அடுத்த 12 நாட்கள் நீதிமன்றக் காவல். மார்ச் 24 வரை ‘உள்ளே’ தான் இருக்க வேண்டும்.

புத்திர சோகங்கள்

புத்திரனால் அடிக்கடி உண்டாகும் சோகத்தில் சோனியாவும், வேறு மாதிரியான புத்திர சோகத்தில் ‘ப.சி’யும் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் அவர்களின் தலையில் அடுத்த இடி இறங்கியது. இந்த வழக்குகளில் ஆஜராகும் கபில் சிபல், சிங்வி போன்ற காங்கிரஸின் மிக மூத்த வழக்கறிஞர்கள் கூட தலை சுற்றிப் போ திகைக்கிறார்கள்.

ஏர்செல் – மாக்ஸிஸ் வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிபிஐ, அமலாக்கத் துறை இரண்டுமே ஒன்றும் செயவில்லை என உச்ச நீதிமன்றம் குற்றஞ் சாட்டியது. ஒத்துழைக்க மறுக்கிறது மலேசியா என்று இன்னும் எத்தனைக் காலம் சோல்லப் போகிறீர்கள் எனக் கேட்டு, 2 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கச் சோல்லியது. 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்பது இரு அமைப்புகளுக்குமான கெடு.

என்ற முறையில் மாறன் சகோதரர்களும், திட்டமிட்டுக் கா நகர்த்தியவர் என்ற முறையில் ‘ப.சி’யும், தவறான முறைகளில் தரகு வேலை பார்த்து லாபம் சம்பாதித்த முறையில் ‘கா.சி’யும் இந்த வழக்கில் தண்டனை பெறுவது உறுதி. அப்படி நடந்தால் மட்டுமே 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் இதுவரை புதிராக இருந்த முடிச்சுகள் அவிழக் கூடும்.  இவர்களின் ‘இத்தாலிய அன்னை’க்கு இதில் என்ன / எவ்வளவு பங்கு என்பது தெரியக் கூடும்.

கா.சி” சென்ற வழி புனிதமில்லை. நம் நாட்டு அரசியலில் சிதம்பர ரகசியம்” என இனி எதுவுமில்லை. முடிவுரை எழுதப்பட்டு வருகிறது. அதிகாரம் தந்த போதையில் பொல்லாத ஆட்டம் காட்டியவர் தன் மகன் கார்த்தி போன பாதையில் ‘உள்’ போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

ஆட்சியில் இல்லாத போதும் பொதுத் துறை நிறுவனங்களில், அரசுத் துறைகளில், நீதித் துறையில் அதிகாரிகள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் பெரும் செல்வாக்குப் பெற்றிருக்கும் ‘ப.சி’யின் சாம்ராஜ்யம் சரிகிறது. சிதம்பரம் பின்னிய சிலந்தி வலையில் தாமே சிக்குண்டார் எனச் சோல்லி இப்போதைக்கு இக்கட்டுரையை முடித்துக் கொள்வோம்.

 

களையெடுப்பு

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கதையாக நிதித் துறை மந்திரிக்கு ஏகப்பட்ட இடைஞ்சல்கள் இன்னமும் தொடர்கின்றன. வருவாத் துறை இணைச் செயலாளர் உத சிங் குமாவத்தின் நடவடிக்கைகள் சந்தேகம் தந்தன. உடனே நிதித் துறையில் இருந்து விடுவிக்கப் பட்டார். அமலாக்கத் துறை இணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் அமைச்சகத்துக்கு உள்ளேயே ஆயிரம் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறார். உள்ளுக்குள்ளே இருந்த களைகளை இப்போது தான் களையத் தொடங்கி இருக்கிறார்கள். அதற்குக் காலம் பிடிக்கும்.

 

மாறன் விவகாரம்

தொலைப்பேசி இணைப்பக முறைகேட்டை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம் மார்ச் 14-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. மாறன் சகோதரர்கள் இருவர், அவர்களுக்கு உதவிய பி.எஸ்.என்.எல் பொது மேலாளர்கள் இருவர், சன் குழும ஊழியர்கள் இருவர், முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் ஒருவர் என எவருமே தவறிழைக்கவில்லை எனச் சோல்லி எழுவரையும் விடுதலை செதது.

சட்டத்திற்குப் புறம்பான 764 அதிவேக தொலைப்பேசி இணைப்புகள். அதன் மூலம் ஏற்பட்ட இழப்புகள் (கிட்டத்தட்ட 1.76 கோடி ரூபா). இது பாமரனுக்கும் புரியக் கூடிய கணக்கு தான். ஆனால் அவற்றில் எதுவுமே நீதிபதிகளின் கண்களுக்குத் தெரியவில்லையாம். மேல் முறையீடு உண்டு என்பது மட்டுமே இப்போதைக்கு ஆறுதலான விஷயம்.

பாராட்டுக்குரியவர்கள்

நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள் ஏகப்பட்ட எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்கிறது. அவதூறு, ஆபாசப் பேச்சு, கொலை மிரட்டல், பொ வழக்கு என ‘கா.சி’ தரப்பில் இருந்து எண்ணற்ற சவால்கள்.  ஆடிட்டர் குருமூர்த்தி, சுப்ரமணியன் ஸ்வாமி இருவரின் பங்களிப்பு சோல்லித் தெரிய வேண்டியதில்லை. ‘ரங்கா‘, ‘ரமேஷ்‘, ‘உங்களில் ஒருவன்‘ போன்ற பிரபல, முகந்தெரியாத சமூக ஆர்வலர்கள் பலரும் அவர்களோடு இணைந்து ஆதாரங்களைத் திரட்டி, ஊக்கம் தந்து போராடியதால் தான் இந்த வழக்கு இந்த அளவிற்கு முன்னேறி உள்ளது. அவர்கள் அனைவரும் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.

 

இன்னும் ‘கூண்டுக் கிளி’ தானா?

சிதம்பரத்தை 2 ஜி அலைக்கற்றை வழக்கில்விசாரிக்க விரும்பி 2014 டிசம்பர் மாதம் சிபிஐ அழைப்பாணை அனுப்பியது. அப்போதைய சிபிஐ இயக்குநர் அனில் சின்ஹா தயவில் ப.சி தப்பினார். அழைப்பாணை அனுப்பிய இணை இயக்குநர் அஷோக் திவாரி துறை மாற்றம் செயப்பட்டார்.

 

 

சிபிஐ – சிறு குறிப்பு

சார்பற்ற விசாரணை நடத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மத்தியப் புலனாவுத் துறை – சிபிஐ – தொடங்கப் பட்டது. பிரதமர் நேரடியாகக் கையாளும் பணியாளர் – பொதுக் குறை தீர்ப்பு – ஓவூதிய அமைச்சகத்தின் கீழ் இயங்கக் கூடிய தன்னாட்சி பெற்ற முன்னணி புலனாவு அமைப்பு.

சிக்கலான, நெடிதான முக்கியத்துவம் வாந்த சிபிஐ வழக்குகளை விசாரிப்பதற்கென்றே பிரத்யேக சிபிஐ நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அவற்றின் நிர்வாகச் செலவு முழுவதையும் சிபிஐ அமைப்பு ஏற்றுக் கொள்ளும். பெயர் மட்டுமே சிபிஐ நீதிமன்றம். மற்றபடி அவை சிபிஐ கட்டுப்பாட்டில் கிடையாது.

தடம் மாறும் நீதி மான்கள்

ஏர்செல் மாக்ஸிஸ் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தால் ‘கா.சி’யை உடனே கைது செயக் கூடாதென அமலாக்கத் துறைக்கு சில நிபந்தனைகளை விதிக்கிறது நீதிமன்றம். சிபிஐயின் செயல்பாட்டில் குறுக்கீடுகள் இருக்கலாமோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. அதே நேரத்தில் மாறன் வழக்கில் வந்துள்ள தீர்ப்பைப் பார்க்கும் போது நீதித்துறையில் களங்கம் படிந்திருக்கிறதோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.