சிக்கல் தீர சிங்கார வேலன்

தீபாவளி முடிந்து மறுநாள் கந்த சஷ்டி விரதம் துவங்குகிறது. விரதத்தின் 6வது நாள் சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. முருகப் பெருமான் சூரனை வதம் செய்வதற்காக தனது அன்னை பார்வதி தேவியிடம் வேல் வாங்கிய திருத்தலத்தின் பெயர் சிக்கல் என்பதாகும்.
இந்த ஊர் நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார். இங்குள்ள அம்மனுக்கு வேல் நெடுங்கண்ணி என்று பெயர். இது அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்று.
கந்த சஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கினார். இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல் நெடுங்
கண்ணி அம்மன் என்று பெயர் ஏற்பட்டது. சூரபத்மனை வீழ்த்துவதற்காக அன்னையிடம் வேல் வாங்கும் இந்நிகழ்ச்சி நடைபெறுகின்ற அன்று வேலின் சக்தியால் முருகனின் சிலை மீது வியர்க்கிறது. பட்டுத் துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டேயிருக்கும் அற்புதத்தை இன்றும் பார்க்க முடியும். ”சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் (திருச்செந்தூர்) சம்ஹாரம்” என்பது பழமொழி.
சிக்கல் சென்று வந்தால் நமது குடும்
பச் சிக்கல்கள் தீர்ந்து விடும்.

One thought on “சிக்கல் தீர சிங்கார வேலன்

  1. நமஸ்தே
    ஸ்ரீ சிங்கார வேலனுக்கு வேலாக மாறி அருள் புரிந்தமையால் இந்த ஊர் அம்மனுக்கு வேல் ஆம் கன்னி (வேலாக மாறிய கன்னிகாபரமேஸ்வரி) என்பது பெயர். வேலாம் கன்னி வேளாங்கண்ணி மருவி நின்றது )வேல் நெடும் கண்ணி என்பது தவறு

Comments are closed.