தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது .சென்னை யில் இரண்டுநாள் மழைக்கே ஆங்கங்கே தெருக்களில் தண்ணீர் ஆறுபோல பாய்கிறது ,மழைக்காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது. என்னவாகுமோ சென்னை ? இதுதான் இன்றய சென்னை வாசிகளின் முக்கிய கேள்வியாக உள்ளது .
ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகராட்சி கழிவுநீர் வடிகாலுக்காகவும் மழை வெள்ளத்தடுப்புக்காகவும் பலகோடி ரூபாயை தனது பட்ஜெட்டில் ஒதுக்குகிறது. மேலும் பலகோடி ரூபாயை சாலை வசதி மேம்பாட்டுக்காகவும் வழங்குகிறது . ஒன்பது மாதங்கள் வெயிலில் எந்த பாதிப்பும் இல்லாது பளிச்சென காட்சியளிக்கும் இந்த புதிய தார் சாலைகள் இரண்டு நாள் மழைக்கே தாக்கு பிடிப்பதில்லை . அதிலும் சொல்லி வைத்தாற்போல மெயின் ரோட்டில் அமையும் சாலைகள் என்றாலும் சரி சந்துகளில் போடப்பட்ட சாலைகள் என்றாலும் சரி ஒரே ரகத்தில் தான் உள்ளது . எதாவது ஒரு சாலை தப்பி பிழைத்தால் அதிசயம் என்னும் நிலை உள்ளது .
பலகோடி ரூபாய் மக்களின் பணத்தை திட்டங்களாக தீட்டி அதனை செயல்படுத்தும் அதிகாரிகள் இந்த தொடர் முறைகேடுகளை தடுக்க எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. அதுசரி இந்த முறைகேடுகளுக்கு ஆணிவேராக உள்ளவர்களிடம் நடவடிக்கை எடு என்றால் யார் மீது நடவடிக்கை எடுப்பது.மேலும் பல அரசியல் வாதிகளுக்கு எங்கு எப்படி எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை சொல்லி கொடுப்பதே இவர்கள் தான் என்ற குற்றசாட்டு உள்ளது மேலும் சில சீனியர் அரசியல் வாதிகள் இதில் பழம் தின்று கோட்டைபோட்டவர்களாக இருக்கிறார்கள்.
டெண்டர்எடுத்து பணியாணையை பெரும்போதே மொத்த தொகையில் கமிஷனாக முன்பணம் 30% கைமாறிவிடுவதாக சொல்லப்படுகிறது இதற்கு பின்னர் மாவட்டம் ,வட்டம் ,தெரு என்று பல அரசியல்வாதிகளின் தடைகளை வேறு சமாளித்தாக வேண்டும்.இந்த நிலையில் எப்படி தரமான சாலைகளை போடுவது. பின்னர் எப்படி இரண்டு நாள் மழைக்கே என்று ஒப்பாரி வைப்பது எல்லாம் சரியாக இருக்கும். இதெல்லாம் தேர்தெடுத்த மக்களின் தலையெழுத்து. நாம் ஓட்டு போடுவதற்கு கையை நீட்டுவதை மாற்றாமல் இந்த அரசியல் வாதிகள் மட்டும் மாறவேண்டும் என்பது எந்த வகை நியாயம் என்பது அரசியல் வாதிகளின் கேள்வி.
இப்படி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி நியாயம் பேசினால் எந்தமாற்றமும் சமூகத்தில் ஏற்படப்போவதில்லை. எல்லா பொதுஜனமும் நமது பகுதியில் செயல் படுத்தப்படும் அரசு திட்டங்கலின் செயல்பாட்டை கவனிக்க வேண்டும் அதனை தவறில்லாமல் தரமானதாக அமைகிறார்களா ?என்பதனையம் நாம் கண்காணிக்க வேண்டும். அது என்பணி இல்லை அதனை அரசாங்கம் பார்த்து கொள்ளும் என்றால் மாற்றம் என்பது என்பது ஏட்டளவில் மட்டுமே இருக்கும்