சுவாமி சித்பவானந்தா அவர்கள் திருப்பராய்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை துவக்கியவர் . அத்துடன் அந்தர்யோகம் எனும் தியான பயிற்சி யையும் நடத்தி வந்தார். . அந்த நிகழ்ச்சியின் ஒரு அங்கம் “ சத் சங்கம் “ என்பது . சந்தேகம் தெளிதல் என புத்தகமாக நிகழ்ச்சியில் அன்பர் ஒருவர் கேள்வி கேட்டார் . ராமாயணத்தில் ஸ்ரீ ராமர் ”இன்று போய் நாளை வா “ என நிராயுதபாணி ராவணனுக்கு வாய்ப்பு தருகிறார். மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் “ வில்லை எடு “ என ஆயுதம் ஏந்தி யுத்தம் புரிய சொல்கிறார். இதில் ஏதோ முரண்பாடு தோன்றுவதாக வினவினார். சுவாமிஜி பின் வருமாறு கூறினார் . “ அர்ஜுனன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவன். அனைவரையும் அழைத்து யுத்தம் வேண்டாம் என பேசி , ஐவரும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பேசினால் அவர் மறுத்திருக்க மாட்டார் .ஐவரும் (குழு) கூடி யுத்தம் புரிய முடிவு செய்து விட்டு பின் அர்ஜுனன் மட்டும் வில்லை கீழே போடுவது பொருந்தாது.
தனி நபருக்கு பொருந்தும் விதிகள் ஒரு குழுவுக்கு (சமுதாயத்திற்கு) பொருந்தாது. ஒரு தாய் தனது குழந்தைகளில் ஒன்று பலவீனமாக இருந்தால் மற்றவர்க்கு விட அதிகமாக உணவுகளை தரலாம் . அது தவறில்லை. அந்த அணுகு முறை குழு / சமுதாயதிற்கு பொருந்தாது. ஒரு சமுதாயம் அல்லது குழு குறைவாக (மைனாரிட்டியாக ) இருக்கிறது என சலுகைகள் வழங்குவது பொருந்தாது . அது பின் விபரீத விளைவுகளை உருவாக்கும் “ என கூறினார்.