பாரத அரசின் புதிய விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். அரசுக்கும் விவசாயிக ளுக்கும் இடையே உள்ள தரகர்கள் நீக்கப்படுவார்கள். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தேசத்தில் எங்கு வேண்டுமென்றாலும் விற்கலாம் எனும் நிலை உருவாகியுள்ளது என ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் வாஷ்ங்டனில் தெரிவித்தார்.