சர்ச்சை பேச்சு – ஆஸம் கான் மன்னிப்பு கேட்கவேண்டும் – மக்களவை தலைவர் உத்தரவு

மக்களவையில் கண்ணியமற்ற வகையில் பேசியதற்காக சமாஜ் வாதி கட்சி எம்.பி. ஆசம்கானுக்கு கட்சி பேதமின்றி பெண் எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் மக்களவையில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

மக்களவையில் நேற்று முன்தினம் முத்தலாக் தடை மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவையில் இல்லை. இதனால் மக்களவைத் தலைவர் இருக்கையில் பாஜக எம்பியும் துணை சபாநாயகருமான ரமாதேவி அமர்ந்து இருந்தார்.

அப்போது சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம் கான் பேசும் போது, “நான் உங்களை மிகவும் விரும்பு கிறேன், எல்லா நேரத்திலும் உங்கள் கண்களைப் பார்ப்பது போல் உணர்கிறேன்” என்ற வகையில் ஆட்சேபகரமாக பேசினார். இத னால் அவையில் இருந்த எம்பிக்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், ஆசம் கான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி கூச்சலிட்டனர். அவைக்கு வந்த ஓம் பிர்லா, “எம்.பி.க்கள் அவையின் கண்ணி யத்தைக் காக்கும் வகையில் பேச வேண்டும்” என்று எச்சரித்தார்.

கட்சி பேதமின்றி ஆசம் கான் பேச்சுக்கு பெண் எம்.பி.க்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி உள்ளிட்டோ ரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பல்வேறு கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லா கூட்டி னார். கூட்டத்துக்குப் பிறகு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, “சமாஜ்வாதி எம்.பி. ஆசம்கான் தான் பேசிய பேச்சுக்கு வரும் திங்கள்கிழமை நாடாளு மன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான உத்தரவு அவ ருக்கு அனுப்பப்படும். அவ்வாறு அவர் மன்னிப்புக் கேட்காவிட்டால், மக்களவைத் தலைவர் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்” என்றார்.