நமது நாடு சுதந்திரம் அடைந்து 22 வருடங்கள் தொடர்ந்து கல்வி அமைச்சர்களாக முஸ்லீம்களே பதவி வகித்தனர். அதனால் தேசிய கல்வி உருவாக்கப்படவில்லை. அக்பர் மகா அக்பர் என்று அழைக்கப்பட்டதும் பாபர் காலம் பொற்காலம், ஒளரங்க சீப்பின் எளிமை. என்றெல்லாம் சரித்திர பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. இவர்களை எதிரத்துப் போராடிய வீர சிவாஜி, ராணா ப்ரதாப்சிங், குருகோவிந்த சிங் போன்ற ஹிந்து மன்னர்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு விட்டது. இந்திய சுதந்திரப் போராட்டம் என்றாலே மகாத்மா காந்திஜி, ஜவஹர்லால் நேரு என்ற இரண்டு பேர்களைத் தவிர மற்றவர்களைத் திட்டமிட்டு மறைத்து விட்டார்கள். நேரு, காந்தி அனுபவித்த சிறைவாசத்தை விட அதிகமான காலம் அதிலும் அந்தமானில் சிறைவாசம் அனுபவித்தவர் வீர சாவர்க்கர்.அவரைக் காங்கிரசார் கொச்சைப் படுத்தினார்கள். வெள்ளையனை குலை நடுங்க வைத்தவன் நேதாஜி. அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். நேதாஜி வரக்கூடாது என்பதற்காக மகாத்மா காந்திஜி பட்டாபி சீதாராமையா என்பவரை நிறுத்தினார். ஆனால் அதில் நேதாஜி வெற்றி பெற்றார். அது காந்திஜிக்கு அறவே பிடிக்கவில்லை. நேதாஜி கெளரவமாக ராஜினாமா செய்தார். நேதாஜியின் தியாகத்தையும் மறைத்து விட்டார்கள். சுதேச சமஸ்தானங்களை இணைத்தவர் சர்தார் வல்லபாய் படேல். நியாயப்படி அவர்தான் பிரதமராக வந்திருக்க வேண்டும். நேரு காந்திஜிக்கு செல்லப்பிள்ளை என்பதால் படேல் ஒதுக்கப்பட்டு நேருவை பிரதமராக்கினார். உண்மையான சரித்திரம் மறைக்கப்பட்டு விட்டது. புதிய கல்விக் கொள்கை தேசபக்த உணர்வை உருவாக்கும் கல்வியாக அமையும் என்று நம்புவோம் !