சமயப்பொறை இல்லாத திப்பு சுல்தான் -ஒரு கொடுங்கோலனின் உண்மை வரலாறு

திப்பு சுல்தான்  ஒரு  சர்வாதிகாரிஅவன் , சுதந்திரப்போராட்ட வீரன் அல்ல “ :  2016 –ல்  ஒரு  முக்கிய  வழக்கில்  கர்நாடகா உயர் நீதிமன்றம்  தந்த  தீர்ப்பு.

திப்பு சுல்தான் ஜெயந்தியை, கர்நாடக காங்கிரஸ் அரசு கொண்டாட முடிவு செய்ததையடுத்து  தொடரப்பட்ட வழக்கில், “திப்பு சுல்தான் மைசூரை ஆண்ட ஒரு மன்னர் மட்டுமே. சுதந்திர போராட்ட வீரர்  அல்ல. அவரது பிறந்த நாளை கர்நாடக அரசு கொண்டாட ஆர்வம் காட்டுவது ஏன்?” என கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது…”

ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை கொன்று குவித்தும், அவர்களை மிரட்டி  இஸ்லாமுக்கு மதம் மாற்றியும், நூற்றுக்கணக்கான ஹிந்து கோவில்களை இடித்து, தரை மட்டமாக்கி அழித்து அட்டூழியம் செய்த திப்பு சுல்தானை, ‘தப்பு சுல்தான்என்று சொல்லுவதே சரி..! 

தந்தையும், தனயனும்  : 

வில்லியம் லோகன் என்பவர்  எழுதிய  ‘ மலபார் வழிகாட்டி’ ( Malabar  Manual ) என்ற நூலில் கேரளாவில் உள்ள மலபார் பகுதியில் இருந்த  ஹிந்துக்களுக்கு எதிராக  ஹைதர்  அலி  செய்த  வன்முறைகள் யாவும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால், ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான், அவனது தந்தையை விட கொடுங்கோலனாக இருந்துள்ளான். நமது பாரதத்தில் உள்ள ‘ மதச்சார்பின்மை’ ( ? ! ) வாதிகளால் மறைக்கப்பட்ட உண்மை வரலாறு இதோ…! நமது பள்ளிக்கூட  வரலாற்று பாடப்புத்தகங்கள்  இதைப்பற்றி வாய் கூட திறக்கவில்லை.

திப்பு சுல்தானின் (கி. பி. 1750 –1799)  உண்மை முகம் என்று ஒன்று உண்டு. அவனது உண்மை வரலாறு என்பது நமது பள்ளிக்கூட மாணவர்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தானின் நிஜ ஓவியம் கூட நம்மில் பல பேர் அறியாதது. இந்த பள்ளிக்கூட வரலாற்றுப்புத்தகங்கள் பல உண்மை வரலாறுகளை மறைத்து, நமது பாரதத்தின் மாணவருக்கு ஒரு பகுதி உண்மைகளை மட்டுமே தெரியப்படுத்துகின்றன. நமது பள்ளி வரலாற்றுப்புத்தகம் என்ன சொல்லுகிறது? ‘திப்பு சுல்தான், மைசூரின் புலி’ (Tipu Sultan, the Tiger of Mysore) என்கிறது. ஆனால் அவனைப்பற்றிய உண்மையான உண்மை என்ன? பொய்யான பொய் என்ன?

திப்பு சுல்தான், தனது நாட்டை  டிசம்பர், 1782   முதல் மே, 1799  வரை, ( 16  ½   ஆண்டுகள் ) ஆண்டான். கேரளாவில் உள்ள மலபார்  பகுதி, அவனது ஆளுமையின் கீழ் எட்டு ஆண்டுகள் இருந்தது.

பூர்ணய்யா என்ற துரோகி :

வஞ்சக எண்ணம் கொண்ட பூர்ணய்யா என்பவனின் துணை இல்லாமல் இருந்திருந்தால், கேரளா  மற்றும் கர்நாடகாவில் நிறைய எண்ணிக்கையில் முகமதியர்கள் எண்ணிக்கையில் பெருகி இருக்க மாட்டார்கள்.  ஹிந்துக்களும் தங்கள்  செல்வச்செழிப்பை இழந்து, எண்ணிக்கையில் சுருங்கியிருக்க மாட்டார்கள்.

பூர்ணய்யா என்ற அந்த பிராமண பிரதம அமைச்சர், திப்பு சுல்தானுக்கு 90 ,000  போர் வீரர்களும், மூன்று கோடி ரூபாயும், விலைமதிப்பற்ற  நவமணிகளும் தராமல் இருந்திருந்தால், திப்பு சுல்தானுக்கு தென்னிந்தியாவை ஆள வேண்டுமென்ற எண்ணம் வந்திருக்காது.  மகாராஷ்டிரா, கூர்க் , திருவாங்கூர் அல்லது பிற இஸ்லாமிய அரசர்களை தனக்கு ஒரு  இடையூறாக திப்பு சுல்தான் நினைக்க வில்லை.

அவன், பிரித்தானியர்களைப்பார்த்து  மட்டும் பயப்பட்டான்.  பிரித்தானியர்களை எப்படியாவது போரில் வென்று விட்டால்,  அவன், எளிதில் தென்னிந்தியாவின் சக்கரவர்த்தியாகி விடலாம் என்று நம்பினான். திப்பு சுல்தானின் பிரித்தானியர்கள் குறித்த அணுகுமுறையைக்கண்ட “மதச்சார்பின்மை” பார்வை கொண்ட  முற்போக்கு சரித்திர ஆசிரியர்கள், திப்பு சுல்தானை ஒரு பெரிய தேசிய வீரனாக   சித்தரிக்க முயன்று தோற்று விட்டனர்.

ஒரு தேசத்தின் மீது கொண்ட பற்றிற்காக , அந்நிய தேசத்தின் சக்திகளுக்கு எதிராக போராட வேண்டுமென்று அவசியமில்லை. தன்னுடைய சுயநல வேட்கைக்காகவும், பிரித்தானிய படைகளை எதிர்ப்பதற்காகவும் திப்பு சுல்தான் போராடினான்.  அவன், பிரெஞ்சு படைகளின் துணையை நாடினான். அந்த பிரெஞ்சு அரசோ, தங்கள் அதிகாரத்தை இங்கு நாட்டுவதற்கான இடப்பெயர்வுகளைச்செய்து கொண்டிருந்தனர்.  பிரெஞ்சு மன்னனான  லூயி பதினாறின் கீழ்  செயின்ட்  ஹெலினா தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த நெப்போலியனின் துணையை  நாடியவன் எப்படி அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடியிருக்க முடியும் ?

மேலும், நமது நாட்டில் ஒரு இஸ்லாமிய அரசை தோற்றுவிக்கவும் திப்பு எண்ணினான். அதை அடைய அவன் பிரித்தானியர்களை போரில் தோற்கடிக்க வேண்டியிருந்தது.  இதற்காக திப்பு சுல்தான், பாரசீகம், ஆப்கானிஸ்தான், துருக்கி  ஆகிய இஸ்லாமிய நாடுகளின் உதவியைக்கோரினான். தன்னிடம் பணிந்து, தனக்கு விசுவாசமாக இருப்பதாக உத்திரவாதம் தந்த கொச்சி அரசரை அவன் ஒன்றும் செய்யவில்லை. அதனால் அவன், ஹிந்துக்களின் நண்பன் என்று எப்படி ஆகும் ?

அக்காலத்தில், தக்காண பீடபூமியில் திப்பு மற்றும் நிஜாம் ஆகியோர்களே இஸ்லாமிய அரசர்களாக இருந்தனர். அதனால் திப்பு, நிஜாம் அரசரோடு எந்த விதமான பகையும் கொள்ளாமல் இருந்தான். நிஜாம் அரசர், தன்னுடைய மகளை, தனது மகனுக்கு திருமணம் செய்து தரவேண்டுமென்று திப்பு,  நிஜாம் அரசரிடம்  கோரிக்கை விடுத்தான். ஆனால், அரச பாரம்பரியம் எதுவும் இல்லாமல், திடீரென்று போர்க்களத்துக்கு வந்த திப்புவின் அந்த கோரிக்கையை நிஜாம் அரசர் ஏற்கவில்லை. இதனால், நிஜாம் அரசரை அவமதிக்க வேண்டுமென்று எண்ணிய திப்பு, மலபார் முஸ்லிம்களின் ஆதரவைப்பெறுவதற்காக கண்ணனூர் அரக்கல் பீபியின் மகளை திருமணம் முடித்தான்.

இதன் பின்விளைவை எல்லாரும் பார்க்க நேரிட்டது.  அரக்கல் பீபி, இஸ்லாமிய சமயத்திற்கு மாறியிருந்தாலும், பெண் வழிச்சமூக நெறியை பின்பற்றியதால், அந்த சமூக முறையை திப்பு  மாற்றம் செய்ய விரும்பினான்.

திப்பு  பாதுஷாவாக  விரும்பினான் :

பிரித்தானியர்களை தோற்கடித்து விட்டு , தனக்குத்தானே  ‘பாதுஷா’  என்று  பட்டம்  சூட்டிக்கொள்ள  திப்பு  விரும்பினான் . அவன், தேர்ந்த ஜோதிட நிபுணர்களின் உதவியுடன் தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள எண்ணினான். ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாத ஸ்வாமி கோவிலில் சில பிராமணர்கள்  இருந்தனர். அவர்கள், திப்பு சில ஜாதக  பரிகாரங்களை செய்தால், அவன் தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம்  என்று ஆரூடம்  கணித்தனர்.

தான் தென்னிந்தியா  முழுமைக்கும்  இணையற்ற  அரசராகி விடலாம்  என்று எண்ணிய  திப்பு, பிரித்தானியர்களை  தோற்கடித்த பிறகு, தனக்கு ஆலோசனையாக தெரிவிக்கப்பட்ட அந்த வேள்விகளை  ஸ்ரீரங்கநாத ஸ்வாமி  கோவிலில் செய்தான்.

‘மதச்சார்பின்மை’ ( ? !! ? ) என்ற பார்வை கொண்ட  வரலாற்று ஆசியர்கள் பார்வையில் இது, ஹிந்து சமயத்தின் மேல் அவன் கொண்ட மதிப்பைக்காட்டுவதாக சொல்லப்படுகிறது.  இதனால், மலபார் பகுதியில், திப்பு சுல்தானால் கோவில்கள் இடிக்கப்பட்டது என்ற வரலாற்றுச்செய்தி குறித்து அவர்கள் சந்தேகப்படுகின்றனர்.

மைசூரின் வரலாறுசொல்வது என்ன ?

“மைசூரின் வரலாறு” ( History  of  Mysore ) என்ற புத்தகத்தை எழுதிய  புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் லூயிஸ் ரைஸ் என்பவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்  :  ” திப்பு சுல்தான் மரணம் அடையும் போது, ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டைக்குள் இரண்டு ஹிந்து கோவில்கள் மாத்திரமே இருந்தன.  திப்பு சுல்தானின் ஜாதகத்தை அனுதினமும் ஆராய்ந்து ஆரூடம் சொல்லும் இரு பிராமணர்களின் திருப்திக்காக அவை விட்டு வைக்கப்பட்டிருந்தன.  திப்புவின் மது விலக்கு, நாடு முழுவதும் அமலில் இருந்ததால், அரசின் வருவாய் இழப்பை சரிக்கட்டுவதற்காக ஹிந்து கோவில்களின் ஒட்டு மொத்த சொத்துக்களும் கி. பி. 1790 -ம் வருடமே  திப்புவால் கைப்பற்றப்பட்டு விட்டன.

திப்புவின் அரசாட்சி  மைசூர் மாகாணத்துக்கு முன்னேற்றமானதாகவும், சிறப்பாகவும் இருந்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மைசூரைச்சேர்ந்த  எம். ஏ. கோபால்  ராவ் என்பவர் தன்னுடைய கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“திட்டமிட்டு செய்யப்பட்ட  வரி விதிக்கும் திட்டத்தின் அடிப்படையில், திப்புவின்  பாரபட்சம் தெளிவாகத்தெரிகிறது. அவன், தன்னுடைய  சக  மதத்தினரான முஸ்லிம்களுக்கு வீட்டு வரி, சரக்கு வரி, மற்றும் வீட்டுப்பொருட்களுக்கான வரிகளை  கட்டுவதிலிருந்து விதிவிலக்கு அளித்தான். இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்களுக்கும் மேற்சொன்ன சலுகைகள்  தரப்பட்டன. அவ்வாறு மதம் மாறியவர்களின் பிள்ளைகளுக்கும் சலுகைகள்  தரப்பட்டன. தன்னுடைய தந்தை  ஹைதர் அலி பின்பற்றியது போலவே, அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் ராணுவம் ஆகிய  முக்கிய பதவிகளில் ஹிந்துக்களை நியமிப்பதை திப்பு சுல்தான் தடை செய்தான். அவன், முஸ்லீம் அல்லாதவர்களை  வெறுத்தான். அவனது பதினாறு ஆண்டு கால ஆட்சியில், பூர்ணய்யா என்ற ஒரே ஒரு ஹிந்து மாத்திரமே திவான்  என்ற பதவியில் இருந்தார். கி. பி. 1797 -ல், அதாவது திப்பு இறப்பதற்கு சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, அரசாங்கத்தில் இருந்த  65  மேல் தட்டு முக்கிய அரசாங்க பதவிகளில் ஒரு  ஹிந்து கூட  இல்லை. முஸ்தாதிர்  என்ற பதவியில்  இருந்தவர்கள் எல்லாருமே  முஸ்லிம்கள் தான்.  கி. பி. 1792 -ல் , திப்பு சுல்தானின் படையில் இருந்த  26  சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகளை பிரித்தானிய படைகள் கைப்பற்றிய போது , அதில் ஆறு பேர் மட்டுமே  ஹிந்துக்களாக இருந்தனர். கி.பி. 1789 -ல், அரசுப்பதவிகளில் முஸ்லிம்கள் மாத்திரமே  நியமிக்கப்பட  வேண்டும்  என்று ஹைதராபாத்  நிஜாம் முடிவு செய்த போது, திப்பு சுல்தானும் அதையே தன்னுடைய மைசூர்  மாகாணத்தில்   பின்பற்றினான்.   படிக்காதவர்களாய் , திறமையற்றவர்களாய் இருந்த போதும், முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக முக்கிய பதவிகளில் முஸ்லிம்கள்  பணியமர்த்தப்பட்டனர்.

திப்புவின் அரசாட்சியில், ஒருவர் பதவி உயர்வு அடைய முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற நிலை நிலவியது. முஸ்லீம் அதிகாரிகளின் வசதிக்காக அரசாங்கத்தின் எல்லா ஆவணங்களும் மராத்தி மற்றும் கன்னட மொழிகளில் எழுதப்படாமல், பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டன. கன்னட மொழிக்குப்பதிலாக, பாரசீக மொழியையே அரசு மொழியாக மாற்றவும் திப்பு முயற்சித்தான். இறுதியாக, அரசாங்கத்தின் எல்லா பதவிகளிலும், சோம்பேறியான பொறுப்பற்ற முஸ்லிம்களே இருந்தனர். பொறுப்பற்ற , கேளிக்கைகளையே விரும்பும் முஸ்லீம் அதிகாரிகள் இருந்த காரணத்தால், மக்கள் சொல்லவியலா அவதிக்கு உள்ளாயினர். அரசாங்கத்தின் முக்கிய பதவிகள் அனைத்திலும் இருந்த முஸ்லீம் அதிகாரிகள், நேர்மையற்றும், நம்பகத்தன்மை இல்லாதவர்களுமாக இருந்தனர். அவர்களுக்கு எதிராக சாட்சியங்களோடு புகார்கள் சொல்லப்பட்ட போதும், திப்பு அந்த புகார்களை விசாரிப்பதில் அக்கறை கொள்ளவில்லை.”

பேர் கூட ஹிந்து பேராக இருக்கக்கூடாது :

திப்பு சுல்தானின் மகனான குலாம் முகமது மற்றும்,  இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களான கிர்மானி ஆகியோரின் புத்தகங்களை அடிப்படையாகக்கொண்டு இதை கோபால் ராவ் எழுதியுள்ளார்.  ஊர்கள்,  இடங்களுக்கு  ஹிந்து சமயம் சார்ந்த பெயர்கள் கூட  இருக்கக்கூடாது என்பதில் திப்பு சுல்தான் மிகக்குறிப்பாக இருந்துள்ளான். மங்களபுரி ( மங்களூர் ) என்பது  ஜலாலாபாத் என்றும், கண்ணனூர்  ( கண்வபுரம் )  என்பது  குஷானாபாத் என்றும், பேப்பூர் ( வைப்புரா )  என்பது  சுல்தான்பட்டினம் அல்லது  பரூக்கி   என்றும், மைசூர் என்பது  நசாராபாத் என்றும், திண்டுக்கல் என்பது காலிகாபாத் என்றும், கோழிக்கோடு என்பது  இஸ்லாமாபாத் என்றும்  திப்பு சுல்தானால் மாற்றப்பட்டது.   திப்பு சுல்தான் இறந்து போன பிறகே, அந்த அந்த பகுதி வாழ் மக்கள், அந்த அந்த ஊர்களுக்கு பழைய பேர்களை வைத்துக்கொண்டனர்.

கர்நாடகாவில் உள்ள கூர்க் பகுதி, மற்றும்   பேதனூர் மற்றும் மங்களூர் ஆகிய ஊர்களில் இஸ்லாமியர்கள் செய்த அட்டூழியங்கள்

திப்பு சுல்தான் செய்த  அட்டூழியங்களைப்போல வரலாற்றில் இது வரை அட்டூழியங்கள் நடந்ததில்லை. ஒரு  கால கட்டத்தில், ஒரே நேரத்தில், பத்தாயிரம் ஹிந்துக்களை முஸ்லிம்களாக மதம் மாற்றினான் திப்பு. மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரே நேரத்தில், ஆயிரம் ஹிந்து கூர்க் இனத்தவர்களை கைது செய்து, அவர்களை  முஸ்லிம்களாக மதம் மாற்றிய பின்பு, ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள கோட்டையில் சிறை வைத்தான். பிரித்தானியர்களுக்கு எதிராக கடைசி  யுத்தத்தில் திப்பு இருந்த போது, தேசத்தில் வெகுவாக குழப்பமும், அராஜகமும்  ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில், அந்த ஸ்ரீரங்கப்பட்டினத்தில் சிறையிருந்த கூர்க் இன மக்கள் அனைவரும், எப்படியோ அந்த சிறையிலிருந்து தப்பித்து, மீண்டும் சொந்த  ராஜ்ஜியத்திற்கு திரும்பி, பிறகு மீண்டும் ஹிந்துக்களாகவே மதம் மாறிக்கொண்டனர்.  கூர்க் பிரதேசத்தின் ராஜாவுக்கு தந்த உத்திரவாதத்தையும் மீறி, அவரது மனைவியை அவரது விருப்பத்திற்கு மாறாக, திப்பு கடத்திச்சென்று தனக்கு மனைவியாகவும் ஆக்கிக்கொண்டான்.

ஆயாஸ்  கான் என்ற கம்மாறன்  நம்பியார்  :

வடக்கு கர்நாடகாவில் உள்ள பிதனூர் என்ற பகுதியில் திப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் அவனை ஒரு காட்டுமிராண்டியாகவும், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு அவனை அடையாளம் காட்டுகின்றன. பிதனூர் பகுதிக்கு ஆளுநராக ஹைதர் அலி கானால் நியமிக்கப்பட்டவர்  ஆயாஸ் கான் என்பவர்.  இவர் , ஹிந்துவாக இருந்த போது இவரது பெயர்  கம்மாறன்  நம்பியார்  ஆகும். இவரை  கடினமாக நிர்ப்பந்தித்து, முஸ்லிமாக மதம் மாற்றினான் ஹைதர் அலி கான். இந்த ஆயாஸ் கானின் அறிவு மற்றும் திறமைகள் குறித்து, ஹைதர் அலி கான் பெரும் மதிப்பு கொண்டிருந்தான். இதனால், ஆரம்பத்திலிருந்தே  இந்த  ஆயாஸ் கான் மேல் திப்பு சுல்தானுக்கு பொறாமை இருந்தது.

தன்னைக்கொலை செய்வதற்கு திப்பு சுல்தான் திட்டமிடுகிறான் என்பதை அறிந்து கொண்ட  ஆயாஸ் கான் , நிறைய தங்கத்தை எடுத்துக்கொண்டு  பாம்பேக்கு தப்பி சென்று விட்டான். திப்பு சுல்தான், பிதனூர்  வந்து, அங்கு இருந்த அனைத்து மக்களையும் வலுக்கட்டாயமாக  இஸ்லாமுக்கு மதம் மாற்றினான். தங்கள் உயிருக்கு பயந்து, பிதனூர்  மக்கள் அனைவரும்   வேறு வழியில்லாமல், இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

கிறித்தவர்களையும்  விட்டு வைக்கவில்லை  திப்பு :

மங்களூர்  நகரைக்கைப்பற்றிய பின்பு, திப்பு சுல்தான், அங்கிருந்த கிறித்தவர்களையெல்லாம் வலுக்கட்டாயமாக மாம்ச விருத்தசேதனம் செய்வித்து, அவர்களை எல்லாம் முஸ்லீம்களாக  மாற்றினான். இதற்கு, திப்பு சொன்ன  காரணம் என்னவென்றால், பிரித்தானியர்கள் அங்கு வரும் முன்பு, போர்ச்சுக்கீசிய  ஆக்கிரமிப்பின் போது, கிறித்தவ மிஷனரிகளால் அங்கிருந்த  முஸ்லிம்கள் கிறித்தவ சமயத்துக்கு மாற்றப்பட்டனர்  என்பது தான். எனவே, போர்ச்சுக்கீசியர்களால் வலுக்கட்டாயமாக  மதமாற்றம் செய்ய வைத்ததற்கான தண்டனையே அது என்றான்.  பிறகு, திப்பு, கேரளாவின்  வடக்கு பகுதியான கும்பலா பகுதிக்கு சென்றான். அங்கு செல்லும் வழியில் கண்ட ஹிந்துக்கள் எல்லாரையும் வலுக்கட்டாயமாக முஸ்லிம்களாக மதம் மாற்றினான். இதற்கு அவன் சொன்ன காரணம் என்னவென்றால், எல்லாருமே ஒரே மதத்தைச்சார்ந்திருந்தால், ஒற்றுமை இருக்குமென்றும், அதனால் பிரித்தானியர்களை எளிதாக வெல்ல முடியும் என்பதாகும். இதையே  இன்று உள்ள முஸ்லிம்களும் , ‘மதச்சார்பின்மை’ (! ?) பேசும் வரலாற்று ஆசிரியர்களும் பேசுகின்றனர்.

மலபார் பகுதியில், திப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள்  :

மலபார் பகுதியில், திப்பு சுல்தான் செய்த அட்டூழியங்கள் எல்லாம் ஹிந்துக்கோவில்கள் மற்றும் ஹிந்துக்கள் மீது தான். லீவிஸ்  பி. பவ்ரி  என்பவர் சொல்லுகிறார் :”  திப்பு சுல்தான் மலபார் பகுதியில் செய்த அட்டூழியங்கள் எல்லாமே, ஹிந்துஸ்தானில், ஹிந்துக்களுக்கு கஜினி முகமது, அலாவுதீன் கில்ஜி , நாதிர் ஷா  ஆகியோர்  இழைத்த  கொடுமைகளை  விடவும்  காட்டுமிராண்டித்தனமானவை என்கிறார். “

முகர்ஜி என்ற சரித்திர ஆசிரியர் , ” திப்பு தனது எதிரிகளைத்தான் மதம் மாற்றினான்” என்று சொல்லுவதை, லீவிஸ்  பி. பவ்ரி மறுக்கிறார்.  ஒரு கொடூர மனம் கொண்டவன் கூட தன்னுடைய  எதிரியைத்தான் சித்திரவதை செய்வான் அல்லது கொல்லுவான். ஆனால், அப்பாவி பெண்களையும், குழந்தைகளையும் கூட  கொடுமை செய்து திப்பு சுல்தான் கொன்றான் என்கிறார்.

இஸ்லாமிய சாத்தானின்’  கோர நடனம்

வில்லியம் லோகன் என்பவர் மாவட்ட ஆட்சியராக இருந்தார். இவர்  எழுதிய “மலபார் மானுவல் (Malabar Manual )”  என்ற  குறிப்புகளில்,  த்ரிசாம்பரம், தாளிப்பறம்பு, தலைச்சேரி, சீராக்கல்  தாலுகா, திருவெண்காடு   ( பித்தளையால் ஆன கோவில் கோபுரம் ) ஆகிய  இடங்களில் இருந்த  கோவில்கள் யாவுமே  திப்பு சுல்தானால், இடித்து அழிக்கப்பட்டன. மணியூரில் இருந்த  மசூதி ஒரு காலத்தில் ஹிந்து கோவிலாக இருந்தது என்று  ” மலபார் மானுவல் ” குறிப்பு கூறுகிறது.

இந்த மணியூர்  ஹிந்து கோவில், திப்பு சுல்தானின் காலத்தில் மசூதியாக மாற்றப்பட்டது என அங்கு உள்ளூரில் உள்ள  மக்களால்  நம்பப்படுகிறது. வடக்கங்கூர் ராஜ  ராஜ  வர்மா என்பவர் தன்னுடைய  ” கேரளாவில் சம்ஸ்கிருத இலக்கியத்தின் வளர்ச்சி”  ( History  of  Sanskrit  Literature  in Kerala )  என்ற தன்னுடைய நூலில், கேரளாவில் இருந்த கோவில்கள், திப்பு சுல்தானின் ராணுவ ஆட்சியில்  ( படையோட்டம் )  எவ்வாறு அழிக்கப்பட்டன  என்று கீழ்க்கண்டவாறு கூறுகிறார். :  ” திப்பு சுல்தானின் ராணுவ நடவடிக்கைகளால் ஹிந்து கோவில்களுக்கு உண்டான பாதிப்புக்கு அளவே இல்லை. ஹிந்துக்களின் கோவில்களை தீக்கரையாக்குவது, ஹிந்து சிலைகளை சேதமாக்குவது, ஹிந்து கோவில்களில் இருந்த  சிலைகள் மேல் பசு மாடுகளின் தலையை வெட்டுவது  ஆகிய கொடூரமான  பொழுதுபோக்குகளை  திப்பு சுல்தானும், அவனது  கொடூரமான ராணுவமும் மேற்கொண்டது. தலைப்பரப்பு மற்றும் த்ரிசாம்பரம் ஆகிய கோவில்களில் திப்பு சுல்தானின் ராணுவம் செய்த  நாசம் நெஞ்சை உலுக்கக்கூடியது. இந்த நவீன ராவணனின் காட்டுமிராண்டிச்செயல்கள் இன்று வரை  நிவாரணம் காணப்படாமல்  இருக்கின்றன.”

சுடுகாடாக மாற்றப்பட்ட  கோழிக்கோடு

1874 -ல் பிரித்தானியர்கள் செய்து கொண்ட  மங்களூர் ஒப்பந்தத்தின்படி, மலபார் பகுதியில் மேலாதிக்க உரிமை செலுத்தும் உரிமை  திப்பு சுல்தானுக்கு தரப்பட்டது.

இதன் பின்விளைவாக, “மலபார்  பகுதி  ஹிந்துக்கள் சொல்லில் அடங்காத சித்திரவதைகளை அனுபவித்தனர்” என்று தன்னுடைய  “கோழிக்கோட்டின்  ஜாமோரியர்கள் ” ( Zamorins  of  Calicut  )  என்ற நூலில்  கே. வி.  கிருஷ்ண  ஐயர் தனக்கு கிடைத்த  சரித்திர  சான்றுகளின் துணை கொண்டு கூறுகிறார்.

திப்பு சுல்தானின் கொடுமையான , வலுக்கட்டாய மதமாற்றத்தைக்கண்டு,   இரண்டாம் நிலை ஜாமோரியர்கள், அவனுக்கு ஒத்துழைக்க மறுத்த போது, அதனால் கோபமடைந்த திப்பு சுல்தான், ஜாமோரியர்களையும் அதன் தலைவர்களையும் வலுக்கட்டாயமாக மாம்ச விருத்த சேதனம்(circumcision) செய்வித்து, இஸ்லாமிய மதத்திற்கு மாற்ற  உறுதிமொழி எடுத்துக்கொண்டான்,” என்றும்  கே. வி. கிருஷ்ண ஐயர் கூறுகிறார்.

லீவிஸ் பி. பவ்ரி மேலும்  கூறுகிறார் : ” முகமதிய மதத்தின் மேல் தான் கொண்டிருந்த ஆழ்ந்த  நம்பிக்கையை  வெளிக்காட்டுவதற்கு கோழிக்கோடு தான் சரியான இடம் என்று திப்பு சுல்தான் கண்டு கொண்டான். மலபார் பகுதியில் நிலவிய பெண் வழிச்சமூக நிலை, பெண்கள் பல கணவர்களை  மணந்து கொள்வது, பெண்களின் அரை நிர்வாண உடைத்தோற்றம் ஆகியவற்றை மாற்றி விட்டு, அந்த ஒட்டு மொத்த சமூகத்தையும், இஸ்லாமிய சமய நெறிகளால் ‘கௌரவிக்க’  விரும்பினான்.

இஸ்லாம் மதத்தில் உள்ள  பல தார விவாகம், இஸ்லாமிய சடங்கான  மாம்ச விருத்த சேதனம்  போன்றவைகள், கேரளாவின்  பாரம்பரியத்திற்கும், அதன் பண்டைய கலாச்சாரத்திற்கும் எதிர் விரோதமாக இருந்தது.

அந்நாளில், கோழிக்கோடு பிராமணர்கள் குடியிருக்கும் மையமாக இருந்தது. அங்கு 7000 பிராமணக்குடும்பங்கள் குடியிருந்தன. திப்பு சுல்தான் செய்த  கொடுமையால், 2000 பிராமணக்குடும்பங்கள் அழிந்தன. திப்பு, பெண்கள், குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. அங்கிருந்து பெரும்பாலானவர்கள், காடுகளுக்கும் வெளிநாடுகளுக்கும் தப்பித்து சென்று விட்டனர்.

1955-ம் ஆண்டு, திசம்பர் 25 -ந்தேதி கேரள “மாத்ருபூமி” வார இதழில், ஏலங்குளம் குஞ்சன் பிள்ளை என்பவர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

“முகமதியர்கள் அதிக எண்ணிக்கையில் பெருகிக்கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான ஹிந்துக்களுக்கு வலுக்கட்டாயமாக மாம்ச விருத்த சேதனம் செய்விக்கப்பட்டது. திப்பு செய்த கொலை அட்டூழியங்களால் நாயர்கள் மற்றும் சாமார்கள் (பட்டியல் இனத்தவர்கள்) பெரிய எண்ணிக்கையில் சுருங்கி விட்டார்கள். நம்பூதிரிகளும் பெரிய எண்ணிக்கையில் குறைந்து விட்டனர்.”

ஜெர்மன் கிறித்தவ மிஷனரியான குண்டெஸ்ட் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறார்: “1788–ஆம் ஆண்டு, 60,000 ராணுவ துருப்புகளோடு, திப்பு சுல்தான் கோழிக்கோட்டுக்கு வந்து, அதை தரைமட்டமாக்கினான். மைசூரிலிருந்து வந்த  இஸ்லாமிய காட்டுமிராண்டியான அவனது கொடூரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.”

கோவில்கள் இடிக்கப்பட்டன  : 

தாலி, திருவெண்ணூர், வாரக்கல், புதூர், கோவிந்தபுரம், தாலிக்குன்னு மற்றும் கோழிக்கோட்டில் இருந்த முக்கிய கோவில்களும், மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்த அநேக கோவில்களும் திப்புவின் ராணுவ நடவக்கைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இவைகளில் சில கோவில்கள், ஸ்ரீரெங்கப்பட்டினம் போரில் திப்பு சுல்தான் வீழ்ந்த பிறகு. கி.பி. 1792-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு மீண்டும் கட்டப்பட்டன.

வேட்டம் பகுதியில் இருந்த கேரளதீஸ்வரம், திருக்கண்டியூர், த்ரிபரங்காடு ஆகிய ஊர்களில் இருந்த பழங்கால புனிதக்கோவில்கள் திப்பு சுல்தானால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இவைகளில் சிலவற்றை, ஜாமோரியர்கள் மீண்டும் கட்டினார்கள். கிறிஸ்துவின் அட்வெந்து காலத்துக்கு முற்பட்ட பழமை வாய்ந்ததும், வேதம் கற்றுத்தரும் மையமாகவும் இருந்த புகழ் பெற்ற திருநவைய கோவில், திப்பு சுல்தானின் ராணுவத்தால் சூறையாடப்பட்டது. ( Malabar Gazetteer).

அந்தக்கோவிலில் இருந்த சிலையை உடைத்த திப்பு, பிறகு அந்தக்கோவிலை வெடிபொருட்கள் வைக்கும் கிடங்காக மாற்றினான். (Malabar Manual ) இந்தக்கோவிலையும், பின்னாளில் ஜாமோரியர்களே செப்பனிட்டனர். கொட்டிக்கன்னு, த்ரிதலா, பன்னியூர், மற்றும் பிற இடங்களில் இருந்த  ஜாமோரியர்களின் கோவில்கள் சூறையாடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டன. சுகபுரம் கோவில் சிதைக்கப்பட்டது. எடப்பாடு பகுதியில், பெரும்பறம்பு கோவில் மற்றும் ஆழ்வான்சேரி தாம்பரக்கல் ஊரில் இருந்த நம்பூதிரி பிராமணர்களின் தலைமைக்கோவிலான மாறநேலிரா கோவிலும் சிதைக்கப்பட்டது. எரநாட்டில் இருந்த திரிக்குளம், ரமநாட்டுக்கராவில் உள்ள அழிஞ்சிலம் கோவில், இந்தியன்னூர் கோவில், மண்ணூர் கோவில் மற்றும் பிற கோவில்களும், திப்புவின் ராணுவத்தால் சிதைக்கப்பட்டன. மம்மியூர் கோவிலையும், பழையூர் கிறித்தவ தேவாலயத்தையும் அழித்த பிறகு, திப்பு  குருவாயூர் கோவிலுக்கு வந்தான். அந்தக்கோவில் அப்போது, திப்புவால் அழிக்கப்பட்டிருக்கும். ஆனால், ஹைதர் அலியால் முஸ்லீமாக மதம் மாற்றப்பட்ட ஹைடிரோஸ் குட்டி என்பவனின் தலையீட்டால், இந்நாளில் பார்ப்பதற்கு அந்த குருவாயூர் கோவில் அழிக்கப்படாமல் இருப்பது போலத்தெரிகிறது. அந்த ஹைடிரோஸ் குட்டி என்பவன், அந்தக்கோவிலைக்காத்து, ஹைதர் அலியால் வழங்கப்பட்டிருந்த நில வரி   விலக்கு, அதற்கு தொடருமாறு பார்த்துக்கொண்டான். அதன் பின், அக்கோவிலின் பக்தர்களால், அந்தக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, செப்பனிடப்பட்டன.

குருவாயூரப்பன் கிருஷ்ணன் சிலை :

திப்பு சுல்தானின் கோபத்திற்கு பயந்து, அந்த குருவாயூரப்பன் கோவிலின் சிலை, திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அமபலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது, என்றும் நமக்குக்கிட்டியுள்ள ஆதாரங்கள் சொல்லுகின்றன. திப்பு சுல்தானின் ஆட்சி முடிந்த பிறகே, அந்த குருவாயூரப்பன் சிலை அங்கு கோவிலில் மீண்டும் சடங்குப்பூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது. இன்றைக்கும், தற்காலிகமாக குருவாயூரப்பன் கிருஷ்ணன் சிலை வைக்கப்பட்டிருந்த அம்பலப்புழாவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டு, வழிபாடு செய்யப்படுகிறது.

பரம்பத்தாலி, பன்மயநாடு, மற்றும் வெங்கிடங்கு போன்ற ஊர்களில் இருந்த கோவில்களில் ஏற்பட்டுள்ள சேதாரம் இன்றைக்கும் தெரிகிறது. திப்பு சுல்தானின் ராணுவ நடவடிக்கையால், சிதைந்து போன பரம்பத்தாலி  கோவிலின் கர்ப்பக்கிருகத்தின் பரிதாபமான கட்டிட தோற்றம் நம் இதயத்தை நொறுக்குகிறது. கோழிக்கோட்டில், திப்புவின் ராணுவம் செய்த  அட்டூழியங்கள் யாவுமே, அந்நாளில் அங்கு கேரளாவுக்கு வந்திருந்த ப்ரா பார்த்தலோமியு அவர்களால் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கேரள சரித்திரத்தின் பேசும் எழுத்து ஆவணங்கள் :

தன்னுடைய இலக்கிய வரலாற்றுப்புத்தகத்தில் (History  of  Literature ), “மலையாள கொல்லம் 965 -ம் ஆண்டில், (பொது ஆண்டிற்குப்பிறகு 1789–90) திப்பு சுல்தான், தன்னுடைய நாகரீகமற்ற காட்டுமிராண்டி துருப்புக்களுடன், மலபார் பகுதியைக்கடந்து, இஸ்லாமிய சமயத்தின் மேல் கொண்ட வெறியால், விலை மதிப்பற்ற செல்வங்களையும், பாரம்பரியத்தையும் கொண்டிருந்த அநேக ஹிந்து கோவில்களையும், கிறித்தவ தேவாலயங்களை இடித்து அழித்தான். இத்துடன், நூற்றுக்கணக்கான ஹிந்துக்களைப்பிடித்து, அவர்களை வலுக்கட்டாயமாக மாம்ச விருத்த சேதனம் செய்வித்து, அவர்களை இஸ்லாத்துக்கு மாற்றினான். இது மரணத்தை உண்டாக்குவதை  விட மோசமான செயலாகும்,” என்கிறார் கோவிந்த பிள்ளை என்னும் சரித்திர ஆசிரியர்.

கடத்தநாடு என்ற பகுதியில், 6000 நாயர்கள் சேர்ந்து, குட்டிபுரத்தில் இருந்த கோட்டையில் இருந்து கொண்டு, திப்புவின் ராணுவத்தை சில வாரங்கள் தடுத்துப்பார்த்தனர். பசி, பட்டினி என்ற நிலைக்கு வந்து, கடைசியில் அவர்களில் பலர் இறந்தே போயினர். திப்பு, அந்தக்கோட்டைக்குள் நுழைந்து, அவர்கள் இஸ்லாமுக்கு மதம் மாறி விட்டால், அவர்களின் உயிரை விட்டு விடுவதாகக்கூறினான். அங்கு மீதமிருந்த 2000 நாயர்கள், உயிருக்குப்பயந்து  ஒட்டு மொத்தமாக இஸ்லாமுக்கு மதம் மாறி, மாம்ச விருத்த சேதனம் செய்து கொண்டனர். அவர்களை மாட்டுக்கறி சாப்பிடும்படி வற்புறுத்தப்பட்டது. ஓரிருவரைத்தவிர, பரப்பனாடு அரச குடும்பத்தைச்சேர்ந்த அனைவருமே  இஸ்லாமுக்கு வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர்.

மனித மிருகம் திப்பு :

அவ்வண்ணமே, நீலாம்பூர் அரச குடும்பத்தைச்சேர்ந்த திருப்பாத் என்பவரை வலுக்கட்டாயமாக கடத்தி வந்து, அவரை இஸ்லாத்துக்கு மதம் மாற்றினார்கள். அதன் பின்பு, ஏற்கனவே மதம் மாறியவர்களை வைத்து மேலும் புதியவர்களை இஸ்லாத்துக்கு மதம் மாற்றினார்கள்.

இறுதியில், கோலத்திரி ராஜா என்பவர் சரணடைந்து, கப்பம் செலுத்தியிருக்கிறார். திப்பு அவரை எவ்வித காரணமும் இன்றி, சதி செய்து கொன்று, அவரது உடலை ஒரு யானையின் காலில் கட்டி, அதை தெருத்தெருவாக இழுத்து வரச்செய்து, பிறகு, அந்த உடலை, ஒரு மரத்திலிருந்து தொங்க விட்டான். இவ்வண்ணமாக, ஹிந்து மதம் குறித்த தனது இஸ்லாமிய வெறுப்பை திப்பு காட்டினான்.

மைசூர் சமஸ்தானத்தின் உடையார் குடும்பத்தை சீரழித்த திப்பு :

ஒட்டு மொத்த மைசூர் உடையார் குடும்பமும், ஹைதர் அலி மற்றும் அவனது மகன் திப்பு சுல்தானால் அவமதிக்கப்பட்டு, அவர்களது தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் சிறை வைக்கப்பட்டது. திப்புவிடம் சரணடைந்த பாலக்காடு அரசர் எட்டிப்பங்கி அச்சன், சந்தேகத்தின் பேரில், ஸ்ரீரங்க பட்டினத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டார். அதன் பின்பு, அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. பாலக்காடு பகுதியில் இருந்த கிறித்தவர்கள், திப்புவின் அட்டூழியங்களைக்கண்டு பயந்து ஓடினார்கள். திப்பு,  தனது ராணுவத்தினை பாலக்காட்டில் பல இடங்களிலும் பாளயமிறக்கி, ஒட்டு மொத்த மலபார் ஹிந்து சமூகத்தையும் மிரள வைத்து, நடுநடுங்க வைத்தான்.

அங்கு மலபார் பகுதியில், ஹைதர் அலியால் விதிக்கப்பட்ட வரிகள், திப்புவால் வலுக்கட்டாயமாக வசூலிக்கப்பட்டது. வயலில் இருந்த பயிர்களும் ஜப்தி செய்யப்பட்டன. இந்தச்செயல், மிகவும் செல்வாக்கு வாய்ந்த  மாப்பிள்ளா நிலப்பிரபுக்களை, திப்புவுக்கு எதிராக போராட வைத்தது.

ஹைதர் அலி, கோவில்களுக்கு வரிவிலக்கு அளித்திருந்தான். ஆனால், திப்பு சுல்தான், அந்தக்கோவில்களுக்கு மிக அதிகமான வரிகளை விதித்தான். பாலக்காடு, கல்பதி பகுதியில் இருந்த ஹேமாம்பிகா தேவி கோவில், கொல்லம்கொட்டு ராஜாவுக்கு சொந்தமான கச்சம்குரிசி கோவில் மற்றும் பாலக்காடு சமணர் கோவில் ஆகியவை திப்பு சுல்தானின் இரக்கமற்ற கொள்கைகளால் மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாயின.

தங்களுடைய பெரும் சொத்துக்களை விட்டு விட்டு, பல நாயர் மற்றும் பிராமண நில உடைமையாளர்கள் நாட்டை விட்டே ஓடினார்கள். மாப்பிள்ளா முஸ்லிம்கள் அந்த நிலங்களையும், சொத்துக்களையும் வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டனர். ஆனால், இன்று, மாப்பிள்ளா முஸ்லிம்கள், அந்த நிலங்கள் மற்றும் சொத்துக்களை மிக அதிகமான நஷ்ட ஈடு கொடுத்து நாயர்கள் மற்றும் பிராமணர்களிடம் இருந்து தாங்கள் வாங்கிக்கொண்டதாக சொல்லுகின்றனர்.

ஆனால், நாயர்களுக்கும், பிராமணர்களுக்கும், உண்மையிலேயே எந்த விதமான நஷ்ட ஈடும் தரப்படவில்லை என்ற போதிலும், இதை ஒரு அப்பட்டமான பொய்யாக இன்றும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். இதே சதி வேலை தான், 1921-ம் ஆண்டு நடைபெற்ற மாப்பிள்ளா கலவரத்திலும் நடைபெற்றது.

சமய ரீதியாக மாசனப்படுகொலை செய்ததிலும், லட்சக்கணக்கான ஹிந்துக்களை, முஸ்லீம்களாக மதம் மாற்றியதிலும், ஆயிரக்கணக்கான மக்களை தங்கள் சொந்த பாரம்பரிய வீடுகளிலிருந்து துரத்தி விட்டு, அவர்களை மிகவும் வறுமைக்கு கொண்டு சென்றதிலும், திப்பு சுல்தான் வெற்றி பெற்று விட்டான்.

நெருக்கடியினால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த பல ஹிந்துக்கள் வேறு வழியின்றி இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள். எனினும், திய்யா போன்ற சமூகத்தவர்கள், தலைச்சேரி மற்றும் மாஹே ஆகிய இடங்களுக்கு தப்பித்துச்சென்றனர்.

பிரித்தானியர்கள், மலபார் பகுதியில் தங்கள் ஆட்சியை நிறுவிய போது, ஹிந்து நில உடைமையாளர்கள், உள்ளூரில் இருந்த மாப்பிள்ளா முஸ்லீம்களிடம் தாங்கள் இழந்த சொத்துக்களை மீண்டும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, மசூதியின் இமாம்கள், “ஹிந்து நில உடைமையாளர்களைக்கொல்லுவது ஒரு புனித இஸ்லாமிய சட்டம்” என்று தங்கள் முஸ்லிம்களுக்கு உபதேசித்தனர். இதன் விளைவாக உண்டானதே  மலபாரில் நடைபெற்ற “மாப்பிள்ளா முஸ்லீம் கலவரங்கள்.” இந்த மாப்பிள்ளா  முஸ்லீம் கலவரங்கள் கி.பி.1921-ல் நடைபெற்றது. அத்துடன், வேறு  வடிவங்களிலும், மிகுந்த அளவிலும், 45 சிறு மாப்பிள்ளா முஸ்லீம் கலவரங்களும் நடைபெற்றன.

செருநாடு, வேட்டநாடு, எறநாடு, வள்ளுவநாடு, தாமரசேரி, மற்றும் வேறு  இடங்களிலும், தாங்கள் சட்ட விரோதமாக இந்துக்களிடம் இருந்து கைப்பற்றிய நிலங்களை இழந்து விடக்கூடாதென்பதற்காகவும், ஹிந்துக்களின் மீது தங்கள் ஆதிக்கத்தை தொடரவும், ஸ்தல மாப்பிள்ளா முஸ்லிம்கள், ஹிந்துக்களின் மீது வன்முறையைக்கட்டவிழ்த்தனர். திட்டமிட்ட கொள்ளையிடுதல், வன்முறை ஆகியவற்றுக்காக பயந்து, முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்த  மலபார் மாப்பிள்ளா பகுதியில், ஹிந்துக்கள் வீதிகளில் நடமாடக்கக்கூட முடியவில்லை.

திப்பு சுல்தான், ஹிந்துக்களுக்கு செய்த கொடுமைகளையெல்லாம் பட்டியலிட்டு, லெட்டினன்ட் கர்னல். ஈ. பிதியன், மாயன், கே.பி. பத்மநாப மேனன், சதஸ்ய திலகன் டி. கே. வேலு பிள்ளை, உள்ளூர் பரமேஸ்வர ஐயர், மற்றும் பிற எழுத்தாளர்கள், மலபார் பகுதியில் அவன் நடத்திய இஸ்லாமிய அரசாங்கம் குறித்து எழுதியுள்ளனர்.

ஸ்ரீரங்கபட்டினத்தில் இருந்த செல்வத்தை அவன் அள்ளி எடுத்து, கொள்ளையடித்துச்சென்றதற்கு அளவே இல்லை. ஆனால், இதைப்பற்றியெல்லாம் நமது பள்ளிக்கூட பாடத்திட்டங்கள் பேசுவதே இல்லை.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மீது தாக்குதல்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மீது திப்பு  நடத்திய தாக்குதல் குறித்துக்காண்போம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், நெடுங்கோட்டை  கட்டப்படாமல் இருந்திருந்தால், ஜாமோரியர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்  தடுக்கப்படாமலே போயிருக்கும். இந்தக்கோட்டை கட்டப்பட்டதால், கோபமுற்ற திப்பு, அங்கமாலி, ஆலவாய், வரப்புழா, ஆலங்கோடு மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வடக்கு பகுதிகளில் இருந்த நகர்களை தாக்கி பழி தீர்த்துக்கொண்டான். இதை, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்  திவானாக பதவி வகித்த த. மாதவ ராவ், தனது “திருவாங்கூர் வரலாறு” என்ற நூலில் எழுதியுள்ளார். அவர், பிரித்தானிய சரித்திர ஆசிரியர்கள் உருவாக்கிய  ஆவணங்களை சார்ந்திருக்காமல், அசல் ஆவணங்களை வைத்தே தனது நூலை எழுதியுள்ளார்.

தங்கள் இடத்தில் என்னவென்ன அட்டூழியங்களையும், வன்முறைகளையும் செய்ய வேண்டுமென்று மாப்பிள்ளா முஸ்லிம்கள் விரும்பினரோ, அத்தனை வன்முறைகளையும், திப்புவின் மதம் மாறிய முஸ்லிம்கள், ஹிந்துக்கள் மேல் நடத்தினர். இந்த பேரழிவுக்கு கிறித்தவ தேவாலயங்களும் தப்பவில்லை. எனினும், ஹைதர் அலியிடம் ஆதியிலேயே சரணடைந்த கொச்சி மன்னரை மட்டும் துன்புறுத்தாமல், திப்பு விட்டு விட்டான். திப்பு தனது ராணுவத்துடன், பாரூர் என்ற ஊருக்குள் நுழைந்து, கொடுங்கல்லூரில் துப்பாக்கி சூடு நடத்திய போது, கொச்சி அரசர், திருவிதாங்கூர் மன்னருக்கு கடிதம் அனுப்பி  “என்னையும் என் குடும்பத்தையும் காக்க வேண்டும்” என்று வேண்டினார்.

இதுகாறும், திப்புவின் ராணுவம் செய்த “படையாட்டக்கோலம்” என்று சொல்லப்படும் கொலை வெறிச்செயல்களை விவரித்தோம். மக்கள்  அனுபவித்த அதி பயங்கர துன்பங்கள் குறித்து, மலையாளக்கவிஞர்கள் ஏராளமான கவிதைகள் எழுதியுள்ளனர். படையாட்டக்கோலம் குறித்து கடத்தநாடு மன்னர் குடும்பத்தைச்சேர்ந்த ஒருவர் எழுதிய கவிதை இதோ:

“ஓ சிவனே! கோவிலிலிருந்து சிவலிங்கம் போய் விட்டது..!

அத்தோடு இந்த மண்ணில் இருந்த லிங்கமும் (ஆண்மை) போய் விட்டதே..!.”¬

திப்புவை தோலுரித்த நீதிமன்றம் :

இப்படி ஹிந்து மதத்தை அழிப்பதெற்கென்றே அவதாரம் எடுத்து வந்த இந்த திப்புவை, சுதந்திரப்போராட்ட வீரன் என்று நமது பள்ளிப்பாடங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அது தவறு என்றும், அவ்வாறு திப்பு ஒரு சுதந்திரப்போராட்ட வீரனல்ல என்றும் கர்நாடகா உயர் நீதிமன்றம் 2016-ல் தீர்ப்பு வழங்கியுள்ளது.

——————-

அடிக்குறிப்பு

மாம்ச விருத்த சேதனம் — சுன்னத் (circumcision)

 

நூல் ஆதாரம்

  1. பி. சி. என் .ராஜா என்பவர் முதன் முதலாய் “கேசரி  ஆனுவல்” ( Kesari  Annual ) என்ற இதழில் 1964 -ல் இந்தக்கட்டுரையை  மலையாள  மொழியில்  எழுதினார். பி.சி. என். ராஜா, ஜாமோரின் அரச குடும்பத்தைச்சேர்ந்தவர் ஆவார்.  இது ஆங்கிலத்தில் பின்னாளில் மொழிபெயர்க்கப்பட்டது.

One thought on “சமயப்பொறை இல்லாத திப்பு சுல்தான் -ஒரு கொடுங்கோலனின் உண்மை வரலாறு

  1. வணக்கம் 🙏
    அருமையான பதிவு. இது போன்ற பல வரலாறுகள் திரிக்கப்பட்டிருக்கிறது என்பது மிகவும் வேதனையாக உள்ளது.
    விக்கிப்பீடியாவில் இந்த உண்மை வரலாற்றை புதுப்பிக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு உண்மை வரலாறு சென்று அடையும். அநற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்
    நன்றி

Comments are closed.