கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 60க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மாதம் இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
மசூதியில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, பார்சி இனத்தைச் சேர்ந்த பெண்கள், வேறு இனத்தைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்தால், அவர்களுக்கு பார்சி வழிபாட்டு தலத்தில் அனுமதி மறுக்கப்படுவது உள்ளிட்ட வழக்குகளையும் இந்த அமர்வு விசாரிக்கும் என்றும் உத்தரவிட்டது. இந்த சீராய்வு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், இன்று விசாரணைக்கு வருகின்றன