சந்திராயன் 2 விண்ணில் பாய்ந்தது

இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் அளித்துள்ள செய்தி குறிப்பில் சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார். ஜூலை 15 அன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் செலுத்தப்படவில்லை. இதனை தற்போது முழுவதுமாக சரிசெய்து விண்ணில் ஏவப்பட்டது. 48 நாளில் புவியிலிருந்து 3.84 லட்சம் கிலோமீட்டர் தூரத்திலுள்ள நிலவில் லேண்டர் என்ற ஆய்வுக்கருவி தரையிரங்கி ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும். இந்திய வரலாற்றில் இது சிறப்பு மிக்க நாள். சந்திராயன் 1 2008ல் செலுத்தப்பட்டது. உலக அளவில் இது நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்து பாரதத்திற்கு பெருமை சேர்த்தது. இதன் தொடர்ச்சியாக சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவில் 100 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றுவட்டாரப்பாதையில் சந்திராயன் 2 வலம் வரும். அதிலிருந்து 1471 கிலோ எடையுள்ள லேண்டர் கருவி தனியே பிரிந்து நிலவில் தரையிரங்கும். இதில் சூரிய சக்தியிலிருந்து 650 வாட்ஸ் மின்சாரம் பெரும் வகையில் சூரிய சக்தி தகடுகள் பொறுத்தபட்டுள்ளது, இது  நிலவின் தென்துருவப் பகுதியில் கனிம வளங்கள் தண்ணீர் இருப்புள்ளதா? மனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா என்பதை சந்திராயன் 2 விண்கலம் ஆய்வு செய்யும். விஞ்ஞான ரீதியாக உலக நாடுகளிடத்தில் பாரதத்தின் பெருமை மேலும் உயரும்.