அன்புடையீர், வணக்கம்.
விஜயபாரதம் சந்தா சேகரிப்பு தினம் 2018 மார்ச் 3 அன்று வடதமிழகத்தில் நடைபெற்றது. 3,189 சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டனர். சந்தா சேகரிப்பில் வேலூர் ஜில்லா முதலிடமும் (500), சேலம் இரண்டாவதாகவும் (400), விழுப்புரம் (240) மூன்றாவதாகவும் வந்துள்ளன. ஆத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், பெரம்பூர் ஆகிய மாவட்டங்கள் நான்காவதாக (200) இடம் பெற்றுள்ளன. அனைவருக்கும் புத்தாண்டு கல்வி மலர் அனுப்பப்பட்டுள்ளது. சந்தா சேகரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் விஜயபாரதம் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறது. தென்தமிழக சந்தா சேகரிப்பு விபரங்களை அதன் பொறுப்பாளர்கள் உடனடியாக விஜயபாரதம் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
நக்ஸலைட்டுகள் தங்கள் புத்தகங்களை ரயிலிலும் பேருந்துகளிலும் கூவிக் கூவி விற்பனை செய்து வருகின்றனர். கிறிஸ்தவ பிரச்சாரம் பற்றி கேட்கவே வேண்டாம். தமிழகம் முழுவதும் திட்டமிட்டு தேசத்திற்கு எதிரான பிரச்சாரத்தை பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் செய்து வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் நமது கருத்துக்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டாமா? அதற்கு விஜயபாரதம் ஒரு கருவியாக செயல்பட்டு வருகிறது.
விஜயபாரத்தின் முக்கியத்துவம் கருதி நாம் சந்தா சேகரிப்பில் முனைப்பு காட்ட வேண்டுகிறேன். வாசகர் ஒவ்வொருவரும் குறைந்தது 5 நபர்களையாவது சந்தாதாரர் ஆக சேர்த்துத் தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
வாழி நலம் சூழ!!!
ம. வீரபாகு, ஆசிரியர்