தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகன் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கணேசன், பொன்னார், எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முருகன் பேசியதாவது:
பாஜக மூத்த தலைவர்களின் ஆதரவோடு வழிகாட்டுதலோடு இந்த இடத்தில் அமர்ந்துள்ளேன். வரும் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இடம்பெறுவார்கள். அதை நோக்கியதாகவே எனது பயணம் இருக்கும். என்று உறுதியாக சொன்னார்.