பெங்களூரில் உள்ள ஜிஹாதிகள் செவ்வாய்க்கிழமை இரவு பொதுச் சொத்துக்களைக் கலவரம் செய்து அழித்துக்கொண்டிருந்தபோது, மாநிலத்தின் பிற இடங்களில் அவர்களின் சகாக்கள் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதில் ஈடுபட்டனர். புனித நகரமான சிருங்கேரியில் உள்ள ஆதி சங்கராச்சாரியார் சிலை மீது அரபு மொழியில் எழுதப்பட்ட இஸ்லாமியக் கொடி போர்த்தப்பட்டதாக சிக்மங்களூருவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய்க்கிழமை இரவு சிருங்கேரி நகரில் உள்ள சங்கராச்சாரியார் மடத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியார் சிலை மீது இஸ்லாமிய கும்பல் அரபு மொழியில் எழுதப்பட்ட இஸ்லாமியக் கொடியை வைத்து சென்றுள்ளது. இதுபோன்ற சம்பவம் சிருங்கேரியின் வரலாற்றில் இதற்கு முன் நடைபெற்றதில்லை.
வியாழக்கிழமை, உள்ளூர்வாசிகள் இஸ்லாமியக் கொடியை கவனித்தபோதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பக்தர்கள் அந்த இடத்தில் கூடி புனித நகரத்தில் ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் இந்த முயற்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு அந்தக்கொடி அகற்றப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜீவ்ராஜ் மற்றும் இந்து ஆர்வலர்கள் வியாழக்கிழமை காலை ஒன்றுகூடி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரிக்கை வைத்தனர்.
காவல்துறையினர் அந்த இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்தனர். உள்ளூர்வாசிகள் அளித்த புகாரின் பேரில் இரண்டு முஸ்லிம் இளைஞர்களான ரபீக் மற்றும் சாஹில் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. உள்ளூர் தலைவர்கள் இது சிருங்கேரியில் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முஸ்லிம் அமைப்புகளான பி.எஃப்.ஐ மற்றும் அதன் சகோதர அமைப்புகளின் வேலையே என சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மாநில அமைச்சரவை அமைச்சர் சி.டி. ரவி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள அவர், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற மக்களை வலியுறுத்தியுள்ளார்.
பாரதத்தில் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான நகரங்களில் ஒன்றான சிருங்கேரி, கி.பி 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கராவால் நிறுவப்பட்ட முதல் மடமாகும். துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரம் வேத கற்றலுக்கான மையமாகவும், மாநிலத்தில் அதிகம் பார்வையிடப்படும் ஹிந்துக்களின் புனித தளங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.