சகோதரி நிவேதிதா, அன்னை தெரசா ஒப்பிடுங்களேன்? பரதன் பதில்கள்

சகோதரி நிவேதிதா, அன்னை தெரசா ஒப்பிடுங்களேன்?

– நிர்மலா நந்தகுமார், வந்தவாசி

‘நிவேதிதா’ சேவையை சேவையாகவே செய்தார். ஆனால் தெரசாவோ தொண்டு என்ற பெயரில், ஏழை எளிய அப்பாவி மக்களை ஏமாற்றி கிறிஸ்தவராக மதம் மாற்றினார்.

* பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக கணவனைப் பிரிக்கும் மனைவியை விவாகரத்து  செய்யலாம்  என்ற  உச்ச  நீதிமன்ற  தீர்ப்பு  சரிதானா?nivethidha

– ஜெகந்நாதன், செகந்திராபாத்

இதற்கெல்லாம் சட்டத்தால் தீர்வு காணமுடியாது. மனைவி புகுந்த வீட்டில் மகள் போன்று இருக்க வேண்டுமானால் அதற்குத் தக மாமியாரும் மாமனாரும் நடந்துகொள்ள வேண்டும். நம்ப நாட்டின் குடும்ப பாரம்பரியம் தான் இதற்கெல்லாம் தீர்வு.

காஷ்மீரின் ஒரு பகுதியை  (Pok) நாம்  பறிகொடுத்தது  எப்படி?

– வே. கார்த்திகேயன், தேனி

அன்றைய பிரதமர் நேருவின் கையாலாகாத அணுகுமுறைதான் காரணம். அன்று ஜெனரல் கரியப்பாவுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தால், காஷ்மீரில் ஒரு அங்குல மண் கூட பாகிஸ்தான் பிடியில் அகப்பட்டிருக்காது.

 

பரதனாரே… எனக்கு நான்கு பெண் குழந்தைகள். ஐந்தாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஒரு பெயர் சூட்டுங்களேன்?

– எஸ். விலாசினி, சிவகங்கை

‘போதும் பெண்’ என்று பெயரிடுங்களேன்.

 

அரசியல் கட்சித் தலைவர்கள் வரிசையாக அப்போலோ சென்று ‘ஜெ’வின் உடல்நலம் விசாரித்து வருவது பற்றி?

– பா. நாகராஜன், பள்ளத்தூர்

நல்ல ஆரோக்கியமான அரசியல்தான். ஆனால் ராகுல், ஸ்டாலின், வை.கோ, திருமா, ராஜாத்தி போன்ற பலரின் உள்மனதில் என்னென்ன கற்பனைகளோ?!

 

கிறிஸ்தவர்களுக்கு பைபிள், முஸ்லிம்களுக்கு குரான் போன்று ஹிந்துக்களுக்கு ஏன் ஒரே புத்தகம் இல்லை?

– சுந்தர மகாலிங்கம், குலசை

ஒரே  அளவுள்ள  குல்லா  எல்லாருக்கும்  பொருந்தாது.

 

* எம்.ஜி.ஆர் போன்று ஹிந்துத்துவ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை என்று ‘விஜயபாரதம்’ இதழில் குறிப்பிட்டுள்ளது  சற்று  நெருடலாக  உள்ளதே?

– அன்பு. சிவஜோதி, பெரம்பூர்

ஹிந்துத்துவத்திற்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் போன்று முன்பும் இல்லை பின்பும் இல்லை என்பதுதான் கட்டுரையின் நோக்கம்.

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.