தேவை முஸ்லிம் பெண்ணுக்கு நீதி

என் கணவர் தொலைபேசி மூலமாகவே தலாக் சோல்லி விவாகரத்து செது விட்டார்.  பாதிக்கப்பட்டுள்ள எனக்கு நீதி வேண்டும் என மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஷாயரா பானு உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளார்.  இதற்குரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.   இதன் காரணமாக நாடு முழுவதும்  தங்களை அறிவுஜீவிகளாக கருதும் சில பிரிவினைவாத அரசியல்வாதிகளின் அடைக்கலத்திலிருக்கும் இஸ்லாமிய பெண்கள் கூட, தங்கள் சமூக பெண்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதை மறந்துவிட்டு, அறிக்கையும் விவாதங்களும் புரிவது வெட்கக்கேடு.

பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, எகிப்து, துனிஷியா, ஈராக் உள்ளிட்ட 22 நாடுகள் தங்களின் முத்தலாக் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளன.  இந்த நாடுகளில் உள்ள இஸ்லாமிய பெண்களின் கோரிக்கைக்கு ஏற்ப இதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.  பாரத தேசத்தில் மதச் சார்பற்ற கட்சியினரும் இஸ்லாமிய அமைப்பினரும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்தினை திருத்தி பொ பிரச்சாரம் செது வருகிறார்கள். dhalak

சட்டத்திலுள்ள தலாக் என்ற பிரிவு, ஆண் – பெண் ஆகிய இரு பாலினத்தவருக்கும் சம உரிமை அளிப்பதாக இல்லை.  பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக இருக்கிறது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது.  இதற்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் முஸ்லிம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  ஆனால் இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் முறையில் சில திருத்தங்களை கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அரசு, தலாக் சோல்வதில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  முஸ்லிம் தனி நபர் சட்டத்தில் இந்த திருத்தம் (7வது பிரிவு) கொண்டு வரப்பட்டுள்ளது.  விவாகரத்து சான்றிதழ் கொடுக்கும் அலுவலகத்திற்கு அல்லது இது சம்பந்தமான யூனியன் கவுன்சிலுக்கு எழுத்து மூலமாக பதிவு தபாலில் விவாகரத்து செவது சம்பந்தமான விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.  இக் கடிதம் கிடைத்த 30 நாட்களுக்குள், அரசானது  விவாகரத்து சம்பந்தமான சமரச தீர்வு அல்லது ஆலோசனை  பற்றிய விவரங்களை தெரிவித்து நடவடிக்கை எடுக்க முன்வரும்.

இதன்பின் சமரச தீர்வு எட்டப்படவில்லை என்றால், தலாக் நோட்டீஸ் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பெண்ணின் தந்தை அல்லது தாயார், அல்லது வயது வந்த சகோதர, சகோதரி மூலமாக வழங்கப்படும்.  பெண்ணின் ரத்த சம்பந்தமில்லாதவர்களிடம் இந்த நோட்டீஸ் வழங்கப்படாது.   இவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை என்றால், அந்த பெண்ணின் அடுத்த குடும்ப உறுப்பினரிடம் வழங்கப்படும். அத்துடன், விவாகரத்து சம்பந்தமான அறிவிப்பு அரசின் நாளிதழில் வெளியிடப்படும்.  வாமொழியின் மூலமாக தலாக் சோல்வது சட்டபூர்வமாக பாகிஸ்தானில் தடை செயப்பட்டுள்ளது.

துனிஷியா

துனிஷியாவில்  நீதிபதியின் அனுமதியில்லாமல் கணவன் மனவியிடம் தலாக் சோல்ல முடியாது.  தலாக் சோல்வதற்கான காரணங்களை  நீதிபதியிடம் முழுமையாக கூற வேண்டும்.  திருமணம், விவாகரத்து மாநில அரசின் வரம்புக்குள் கொண்டுவரும்படி சட்ட திருத்தம் செயப்பட்டுள்ளது.  நீதிமன்றத்திற்கு வெளியே நடத்தும் தலாக் மூலமான விவாகரத்து சட்டப்படி செல்லாது.  தலாக் சோல்வதற்கு முன் அரசானது முழுமையாக விசாரணை நடத்தியும் சமசரத்தின் படி விவாகரத்தை தவிர்க்க இயலுமா என்றும் பார்த்த பின்னர் தான் தலாக் சோல்வதற்கும் விவாகரத்து  செயவும் அனுமதி அளிக்கும்.

மலேசியா

பாரத தேசத்திற்கு நட்பு நாடாக இருக்கும் மலேசியா ஒரு முஸ்லிம் நாடு.  இங்கு 85 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.  குறிப்பாக இந்திய வம்சாவளியினர் கூட ஆட்சிக்கு வரக் கூடிய அமைப்பு உள்ள நாடு மலேசியா.  இந்த நாட்டில் கூட இஸ்லாமிய ஷரியத் சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.  திருமணம் செவது கூட சட்டப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவே, சில சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மலேசியாவில் நடக்கும் திருமணங்கள் அனைத்தும் முறையாக பதிவு செதாக வேண்டும்.

குறிப்பாக தலாக் சோல்வதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை அரசியல் பிரிவு 303-ன் உட்பிரிவு 47-ல் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.  விவாகரத்து பெறும் கணவன் அல்லது மனைவி, நீதிமன்றத்தில் அதற்குரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.   திருமணம் பற்றிய அனைத்து விவரங்களுடன், குழந்தைகள் அவர்களின் வயது, குழந்தைகளுக்கு திருமணம் நடந்திருந்தால் அது பற்றிய விவரங்கள் அடங்கிய கோப்புகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.  இது நீதிமன்ற நடவடிக்கை 45வது பிரிவின் படி வழங்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை, நீதிமன்றம் விவாகரத்து கோரியவரின் எதிர் மனுதாரருக்கு அனுப்பி வைக்கப்படும்.   இருவரையும் விசாரணைக்கு நீதிமன்றம் அழைக்கும்.  இவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் விவாகரத்து தேவை என்று இருவரும் ஒருசேர வலியுறுத்தினால், நீதிமன்ற அனுமதியுடன் முதல் தலாக் கூற அனுமதி அளிக்கப்படும்.  இதன் பின்னர் தலாக் கூறியதின் நோக்கத்தை முறையாக பதிவுத் துறை அதிகாரிக்கும் முதன்மை பதிவு அதிகாரிக்கும் அனுப்பி வைக்கப்படும். எனவே மலேசியாவில் தலாக் சோல்வதிலிருந்து விவாகரத்து பெறுவது வரை சட்டத்தின் மூலம் உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  இது ஷரியத் சட்டத்திற்கு புறம்பானது என அந்நாட்டில் எவரும் குரல் எழுப்பவில்லை.

ஈராக்

ஈராக் நாட்டில் தலாக் என்பது வாமொழியாக மூன்று முறை ஒரே நேரத்தில் உச்சரித்தால் விவாகரத்து என எண்ணப்படுகிறது.  ஆனால் விவாகரத்துக்கு காரணம் இருவருக்குள் ஏற்படும் வேற்றுமையாக இருக்க வேண்டும்.  நீதிமன்றம் இவர்களின் வேற்றுமைக்கு என்ன காரணம் என்பதை விசாரணை நடத்தும்.   இதற்காக இஸ்லாமிய முல்லா மௌல்விகளுக்கு அதிகாரம் கிடையாது.  விவாகரத்து கொடுக்கும் அதிகாரமும் மசூதிகளுக்குக் கிடையாது. முஸ்லிம் நாடுகளில், ஷரியத் சட்டத்தை திருத்தி, முஸ்லிம் பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.  ஆனால் பாரத முஸ்லிம் அமைப்புகள் கூறும் வாதிகள் வைக்கும் வாதங்கள் பெண்களுக்கு எதிரானவை.

 

 

 

‘’

ஒரு வழக்கறிஞரின் நேரடி அனுபவம்

விழுப்புரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னணி வழக்கறிஞருமான கு.பா. பழனியப்பன் ‘நோட்டரி பப்ளிக்’ (சான்று அலுவர்) பொறுப்பிலும் உள்ளவர். கணவரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு இவரிடம் சான்று பெற கணவனுடன் வந்த முஸ்லிம் பெண், சில மாதங்களுக்குப் பின் கண்ணீருடன்  வந்தார். தன்னையும் தன் மகளையும் கைவிட்டுவிட்டு கணவன் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிவித்தார். இடையில் தலாக் நடந்திருக்கிறது – கடிதமூலம்! (அந்த நபர் முன்பே ஒரு பெண்ணை மணந்து தலாக் செய்து துரத்தியவன்). என்னைப் போல எத்தனை முஸ்லிம் பெண்கள் தலாக்கால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ என்று அந்தப் பெண் வருந்தியதாக பழனியப்பன் கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார். சட்டபூர்வமாக அந்த அபலைக்கு உதவ முயற்சி தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கிறார் பழனியப்பன்.