திப்புசுல்தான் – இவன் ஒரு மத வெறியன் என்பதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ஹிந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் கத்தி முனையில் கூட்டம் கூட்டமாக மதம் மாற்றினான். மறுத்தவர்களை சகட்டுமேனிக்குப் படுகொலை செய்தான். ஏராளமான கோயில்களையும் சர்ச்சுகளையும் இடித்து தரைமட்டமாக்கினான். இவன் கிறிஸ்தவர்களின் மீது நடத்திய தாக்குதல்கள் பற்றி, விரிவாக மங்களூர் கத்தோலிக்க பிஷப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திப்புசுல்தானின் பிறந்த நாளை காங்கிரஸ் ஆளும் கர்நாடக அரசு, அரசு விழாவாகக் கொண்டாட முடிவு செய்தது. அவரது பிறந்த நாள் நவம்பர் 20ம் தேதி. ஆனால் பத்து நாட்களுக்கு முன்பே நவம்பர் 10ம் தேதியன்று தீபாவளி பண்டிகை நாளன்று திப்புசுல்தான் ஜெயந்தியை மாநிலம் முழுவதும் கொண்டாடினார்கள். போதாக்குறைக்கு எழுத்தாளரும் சினிமா நடிகருமான கிரிஷ் கர்னாட் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயரை வைக்கவேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஹிந்துக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூர்க் மாவட்டத்தில் உள்ள மடிகேரியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் 100 பேர் கலந்து கொண்டனர். திடீரென்று கார்களில் வந்திறங்கிய எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. என்ற முஸ்லிம் அமைப்புகளின் ரவுடிகள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாகத் தாக்கினார்கள். இதில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் டி.சி. குட்டப்பா, தலை நொறுங்கி, முகம் சிதைந்து, படுகொலை செய்யப்பட்டார். கொலைகாரர்களைத் தப்பிக்கவிட்டு அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த விஸ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள் மீது அராஜக காவல்துறை நடத்திய தடியடியில் ராஜு என்பவர் கொல்லப்பட்டார். கல்புர்கி படுகொலை செய்யப்பட்டபோது கொந்தளித்த கட்சிகள், ஊடகங்கள், பிரபலங்கள், குட்டப்பா படுகொலை செய்யப்பட்டபோது வாய்மூடி மௌனிகளாக இருந்தது ஏன்?
காரணம் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. செத்துப் போனவன் ஹிந்து தானே! கொன்றது முஸ்லிம் அமைப்புகளாச்சே.. இதுதான் இவர்களின் மதச்சார்பின்மை லட்சணம்.