தஞ்சை தொப்பராங்கட்டி விஜய நகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட ஒரு வினாயகர் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை குத்தகைக்கு எடுத்த சபாபதி என்பவர் கோயிலின் ராஜகோபுரத்தையே வீடாக மாற்றியுள்ளார். அவர் குடும்பம் 60 வருடங்களாக அங்கே குடியிருந்தது. இது குறித்த புகார்களை அறநிலையத்துறை கண்டுகொள்ளவில்லை. சமீப காலமாக மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், எதிர்ப்புகள் அதிகரிக்கவே வேறு வழியில்லாமல் இந்த ஆக்கிரமிப்பை அகற்றியது அறநிலையத்துறை.
ஒரு கோயிலுக்கே இந்த நிலை என்றால், கோயில் சொத்துக்களின் கதி!?