அயோத்தியில் விளக்கேற்ற வாங்க

உலகில் மக்கள் அனைவருக்கும் மறக்க முடியாத ஆண்டாக 2020 திகழ்ந்துள்ளது என்றால் அது மிகை அல்ல. கொரோனா, பொருளாதார வீழ்ச்சி என எதிர்மறை செய்திகள் பல இருந்தாலும், நல்ல செய்திகள் நிறையவே இருக்கத்தான் செய்கின்றன.

அவற்றில் முக்கியமான ஒன்று, நம்முடைய 492 வருட காத்திருப்பு சுமூகமாக முடிந்து அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பூமிபூஜை நடைபெற்றது இந்த வருடம்தான் என்பது. இது ஹிந்துக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி. வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வும்கூட.

இதையொட்டி இந்த வருட தீபாவளிக்கு உத்தரபிரதேசம், அயோத்தி சரயூ நதிக்கரையில் மண்ணால் செய்யப்பட்ட 10 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அற்புத நிகழ்வில் பொதுமக்களும் கலந்துகொண்டு விளக்கேற்றி ராமனின் அருளைப் பெற உத்தரபிரதேச அரசு வழிவகை செய்துள்ளது.

இதற்காக இணையதளம் ஒன்று துவக்கப்படுகிறது. இதில் மக்கள் ஸ்ரீ ராமருக்கு டிஜிட்டலில் முப்பரிமாண முறையில் விளக்குகள் ஏற்றலாம். விளக்கேற்றிய பிறகு, விழாவில் கலந்து கொண்டதற்காக உ.பி முதல்வரின் நன்றிக் கடிதம், சான்றிதழ், குழந்தை ராமரின் அழகிய புகைப்படம் வரும்.

மேலும் சரயூவில் விளக்கேற்றுவதற்காக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் மட்டுமே அதில் பங்கேற்பார்கள். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழா நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவிருக்கும் இந்த இணையவழி தீபாவளி உற்சவத்தில் நாமும் கலந்து கொள்வோம், ஸ்ரீ ராமனின் அருளைப் பெறுவோம்.

One thought on “அயோத்தியில் விளக்கேற்ற வாங்க

  1. விழா வெற்றிபெற இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

Comments are closed.