கொரோனா நோயும் – அரசியல்வாதிகளின் அபசகுனமும்

உலகம் முழுவதும் அச்சத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு அல்லல் படும் போது ,   தமிழக அரசியல்வாதிகளும்,  காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும்,  காம்ரேட்டுகளும் அபசகுனமாக ஒப்பாரி வைக்கிறார்கள்.   மோடியின் மீது ஏற்பட்ட காழ்புணர்ச்சியின் காரணமாக, அபாண்டமான பழியை சுமத்தும் செயலை செய்கிறார்கள்.    கிறிஸ்துவன், திருமுருகன் காந்தி என பெயர் வைத்துக் கொண்டு,  மோடி அரசின் செயல்பாடுகளை தேச விரோத செயல் போல் கருதி டுவிட்டரில் பதிய விடுவது அப்பட்டமான அந்நிய விசுவாசமாகும்.    அரசின் செயல்பாடுகளை முழுமையாக தெரிந்து கொள்ளாமல்,  ராகுல் காந்தி  Isn’t this a criminal conspiracy    என குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

திருவாளர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கதில், மதிப்புமிக்க பிரதமர் அவர்களே,  WHO இன் ஆலோசனைபடி,  1. வென்டிலேட்டர் 2. சர்ஜிக்கல் மாஸ்க், போதிய பங்குகளை வைத்திருப்பதற்கு பதிலாக, மார்ச் 19 வரை இந்த எல்லாவற்றையும் ஏற்றுமதி செய்ய இந்திய அரசு ஏன் அனுமதித்தது? இந்த விளையாட்டுகளை எந்த வகையான சக்திகள் ஊக்குவித்தன? இது ஒரு கிரிமினல் சதி அல்லவா? ”  என பதிய விட்டுள்ளார்.   ஆனால் உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல், அவசரகதியில், பிரதமரின் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு எதுவும் கிடையாது.  Ministry of Commerice & Industry.  Department of commerice,  Directorate General of Foreign Trade  துறையின் சார்பாக 31. ஜனவரி மாதம் 2020-ல்  Notification No. 44/ 2015 -2020  dated 31.1.2020   ன்படி   ஏற்றுமதிக்கு தடைவிதித்து உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இவ்வாறு தவறான கருத்தை தனது டுவிட்டரில் பதிய விட ராகுல் காந்திக்கு எந்த சக்தி ஊக்குவித்தது என்பதை காங்கிரஸ் கட்சியினர் பொது மக்களுக்கு தெரிவிப்பார்களா?

மோடி அரசாங்கம் ,வைரஸின் கோரத்தை புரிந்து கொண்டதால்,   மருத்துவர்களுக்கு பயன்படுத்தும்          50,000க்கும் மேல் கையிருப்பில் வைத்துள்ளது.   மக்களுக்கு பயன்படுத்தும் முக கவசம் அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.  ஆனால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் ரூ2.5 கோடி மதிப்புள்ள  என் 95  மாஸ்க்  ஜெய்பூர் Sawai Man  Singh       மருத்துவமனையிலிருந்து கானாமல் போய்விட்டதே, அது பற்றி ஏன் டுவிட்டரில் ராகுல் காந்தி பதியவில்லை.

தொடர் சோதனையின் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனும் ஐ.நா.வின் ஆலோசனையை மோடி அரசு நிராகரித்திருக்கிறது.  ஆனால் இத்தாலி இதை பின்பற்றி முழுமையாக கட்டுப்படுத்தியது.  குடியுரிமை சட்ட வழக்கில் ஐ.நா. தலையிட்டதால் ஐ.நா.வை நிராகரிக்கும் பொறுப்பற்ற அரசை யார் கேள்வி  கேட்பது? என அறிவுஜீவி திருமுருகன் காந்தி டுவிட்டரில் பதிய விட்டுள்ளார்.  கொரோனாவை இத்தாலி கட்டுப்படுத்தியதாக திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளது வடிகட்டிய பொய்யாகும்.   பாரத தேசத்தை இழிவுபடுத்த வேண்டும் என்றும், மோடி அரசை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கில் பதிய விட்ட பதிவாகும்.  உண்மையில் சீனாவிற்கு அடுத்தப்படியாக அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி.  தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் கூடி வருகிறது.   திருமுருகன் காந்தி தனது டுவிட்டரில் பதிய விட்ட சமயத்தில் 6078 பேர்கள் பலியாகியுள்ளார்கள்.  சுமார் 63,928 பேர்கள் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள்.    இந்தியாவில் பலியானவர்கள் 9 பேர்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் 500க்கும் குறைவானர்கள் என்றும் கூறப்படுகிறது.

இத்தாலியில் பலியானவர்களில் 70 சதவீதம் 70 வயதிற்கு மேல் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.  கிறிஸ்துவ திருமுருகன் காந்தி,  இத்தாலி நாட்டை ஆதரிக்க எவ்வித மறுப்பும் கிடையாது.  அதற்காக மோடி அரசாங்கத்தை விமர்சனம் செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.  இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட ஐ.நா.சபையின் பொதுச் செயலாளருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.  ரோஹிங்கிய முஸ்லிம்களை பங்களா தேஷ் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை.  ஐ.நா.சபை பொதுச் செயலாளர் என்ன செய்தார்,  ஏற்க மறுத்த நாடுகளின் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டாரா என்பதை திருமுருகன் காந்தி விளக்க வேண்டும்.

கேரளத்தில் ஆட்சியில் உள்ள இடதுசாரிகளின் பொய் பிரச்சாரம், சீனாவை மிஞ்சி விட்டது.   இந்நிலையில் மக்களால் வெறுத்து தூக்கி எறியப்பட்ட கம்யூனிஸ்ட்கள் , கொரோனா விவகாரத்தில் அரசியல் லாபம் பார்க்கிறார்கள்.  இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கேரளாவும்,  உலக அளவில் கியூபாவும், சீனாவும் தான் சிறந்து விளங்குகிறது என சுய விளம்பரம் செய்துக் கொள்கிறார்கள்.   கேரளத்தில் கொரோனா வைரஸ் பரப்பியதே சீனா தான் என்பதை கேரள காம்ரேட்டுகள் புரிந்தும் புரியாமல் நடிக்கிறார்கள்.   ஜனவரி மாதம் 24ந் தேதி கொல்கத்தா வழியாக வுகான் மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு திரும்பிய மருத்துவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.  இவர் திருச்சூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்.  இரண்டாவது ஆழப்புலாவை சார்ந்தவர் ஒருவர், மூன்றாவதாக காசர்கோடு பகுதியை சார்ந்தவர்.  இவர்களும் சீனாவிலிருந்து வந்தவர்கள்.   இவர்களுடன் பிப்ரவரி மாதம் 3ந் தேதி சீனாவில் வுகான் மாநிலத்தில் மருத்துவ படிப்பு படித்த மாணவர் கேரள திருப்பிய போது, அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்தது.   இதன் காரணமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கதை அளக்கும் கேரள அரசாங்கம்,

இன்று இந்தியாவிலேயே இரண்டாவது பாதிப்பிற்குள்ளான மாநிலம் என்பதை மறந்து விடக் கூடாது.    கேரளாவில் பாதிக்கப்பட்ட 22 பேர்களில் 15 நபர்கள் வுகான் மாநிலத்திலிருந்து திரும்பியவர்கள்.   எந்த ஒரு சோதனையும் நடத்தாமல், சீன யாத்திரிகர்கள் கேரளாவில் நடமாடுகிறார்கள்.   29 பிப்ரவரி மாதம் இத்தாலியிலிருந்து கேரளா வந்த வெளிநாட்டு வாழ் இந்திய குடும்பம் எந்தவிதமான மருத்துவ பரிசோதனையும் நடத்தாமல்,  கொச்சி விமான நிலையத்திலிருந்து வெளியேறினார்கள்.  இவர்களால் மேலும் 11 பேர்களுக்கு கொரோனா நோய் தொற்றியுள்ளது.  விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்திருந்தால் கட்டுப்படுத்திருக்க முடியும்.  மாநில அரசின் தவறின் காரணமாக கேரளாவில் மேன்மேலும் பாதிப்பு ஏற்படுகிறது.  இதுதான் கேரள கம்யூனிஸ்ட் அரசின் சிறப்பான செயல்பாடு.  கேரளத்தை சார்ந்த 500 மாணவர்கள் சீன பல்கலைகழகங்களில் படிக்கிறார்கள்.  சுமார் 124 நாடுகளில் 2.5 மில்லியன் கேரள மாநிலத்தவர்கள் பணியாற்றுகிளார்கள்.  இவர்களில் எத்தனை பேர்கள் விடுமுறைக்கு என கேரளம் வந்திருப்பார்கள் என்ற கணக்கை மாநில அரசு ஏன் இதுவரை வெளியிடவில்லை.  அப்படி வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை மாநில அரசு மருத்துவ சோதனை நடத்தியதா என்றும் தெரியவில்லை.   இதை தான் பிரதமர்  கேரள முதல்வரிடம் பாடம் கற்க வேண்டும் என பிரிவினைவாதி திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் , வுகான் மாகாணத்தை  தவிர சீனாவின் வேறு பகுதிகளுக்கு பரவவில்லை.   டிசம்பர் 2019ல் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன என கூறும் சீனா,   கேரள காம்ரேட்கள் கூறுவது போல்,  முற்றிலும் கட்டுப்படுத்தவில்லை.   சில தினங்களுக்கு முன் மார்ச் 18 முதல் 22ந் தேதி வரை சீனாவில் கொரோனா வைரஸ் முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என அறிக்கை வெளியிட்டார்கள்.  மார்ச் மாதம் 20 ந்தேதி கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 63 வயது  சீனர் வுஹான் மாகாணத்தில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.    தென் சீன மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிக்கை,  40,000 க்கும் அதிகமான மக்கள் அறிகுறிகளே இல்லாமல், கொரோனா வைரஸை சுமந்து கொண்டு இருப்பதாக கூறியுள்ளது.  உலக சுகாதார நிறுவனம் கூட, சில கருத்துக்களை வெளியிட்டுள்ளது.  அறிகுறியற்ற நோயாளிகள் குறித்த தகவல்களை அதிகாரபூர்வ தரவுகளில் , சீனா சேர்க்கத் தவறியது.  இது அந்நாட்டின் வெளிப்படைத் தன்மைக்கான உறுதிப்பாட்டின் மீது சந்தேகம் எழுவதாக குறிப்பிட்டுள்ளது.   இந்நிலையை தான் கேரள காம்ரேட்டுகள் உலகத்தில் சீனாவும் கியூபாவும் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என விளம்பரம் செய்கிறார்கள்.