கடந்த சில மாதங்களாகவே உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகளின் மத்தியில் இந்து கலாச்சாரத்தின் ஒரு அங்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க கலாச்சாரமான கை குலுக்குவதும், கட்டி அணைப்பதும் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. கட்டி அணைப்பதும், கை குலுக்குவது நாகரீகத்தின் உச்சமாக இந்தியாவிலும் சிலரால் கருதப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் , கை குலுக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
இந்து கலாச்சாரத்தில், மரியாதையைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல் நமஸ்தே அல்லது வணக்கம், இந்த சொல் மரியாதையின் அறிகுறியாகக் கைகூப்பி தெரிவிக்கும் சொல்லாகும். ஒருவரை ஒருவர் இருகரம் கூப்பி நமஸ்தே என்பது நல்லொழுக்கத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. ஒருவரை வரவேற்கும் போது செய்யப்படும் செயலாகும். வட மாநிலங்களில் நமஸ்தே என்பதும், தென்னகத்தில் வணக்கம் என்பதும் முறையாக செயல்படும் ஒரு சம்பரதாயமாகும். வணக்கம் அல்லது நமஸ்தே சொல்லும் பொழுது இருகரம் கூப்புவது, வலதுகரம் நாம் எனவும், இடதுகரம் நம் முன் நிற்பவர்களை குறிப்பிடும்.
இந்துக்களின் பண்பாட்டில், நமஸ்தே அல்லது வணக்கம் என கூறுவதில் கூட பல வேறுபாடுகள் உள்ளன. நன்பர்கள், உறவினர்கள், விருந்தினர்களை வரவேற்கும் போது இரு கரங்களையும் இதயத்தின் முன் நிறுத்தி, இதயபூர்வமாக சிரம் தாழ்ந்தி பணிவுடன் வணக்கம் என்கிறோம். இதுவே தாய் தந்தைரை வணங்கும் போது முகத்தின் முன் இரு கரம் கூப்பி வணங்க வேண்டும் . ஏன் முகத்தின் முன் இரு கரம் கூப்பி வணக்கம் கூற வேண்டும் என்றால், ஒரு மனிதனை அடையாளம் காண்பது என்பது முகத்தை வைத்தே அடையாளம் காண்போம், நம்மை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் தாயும் , தந்தையும் என்பதால் முகத்தின் முன் கரங்கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும்.
நமக்கு அறிவை போதிக்கும் குருவை வணங்கும் போது, நெற்றிக்கு நேர் கரங்கூப்பி வணங்க வெண்டும். ஏன் என்றால் நம் சிந்தனையை தூண்டி நம்மை சிந்தித்து செயற்பட வைத்தவர் என்பதினால், குருவை நெற்றிக்கு நேர் கரங்கூப்பி நமஸ்தே என கூறி வணங்குகிறோம். இதுவே கடவுளை வணங்கும் போது, கடவுள் அனைத்தையும் கடந்தவர், அனைத்தையும் தந்தவர் எப்பொழுதும் நம்மை ஆழ்பவர் என்பதனால், நாம் கரங்களை முடிந்த அளவிற்கு தலைமேல் உயர்த்தி இருகரம் கூப்பி வணங்குகிறோம். இந்த கலாச்சாரத்தை எள்ளி நகையாடியவர்கள், இன்று கொரோனா வைரஸ் நோய் பயம் பீடித்துள்ளதால், தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ளவே இந்து கலாச்சாரத்தை கடைபிடிக்க துவங்கியுள்ளார்கள். உலக அளவில் கை குலுக்கல் மற்றும் கட்டி அமைப்பது நிறுத்தப்பட்டு, கை கூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்கள்.
2020 மார்ச் மாதம் 12ந் தேதி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரு நாட்டுதலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கருடன் கை குலுக்காமல், அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் வணக்கம் தெரிவித்தார். இது குறித்து டிரம்ப் விளக்கியபோது, கை குலுக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல், திகைத்தேன், அண்மையில் தான் இந்தியாவில் இருந்து நான் திரும்பினேன். அங்கே அனைவரும் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தனர். அந்த முறை மிகவும் எளிமையாக உள்ளதால், இந்தியாவிலிருந்து வந்ததிலிருந்து கை குலுக்காமல், வணக்கம் தெரிவித்து வருவதாகவும், இந்த செயல்பாடு கோவைட் -19 தொற்று நோய் வேகமாகப் பரவி வரும் இந்த சூழ்நிலையில் இதுதான் சிறந்த முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது பற்றி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் கட்டுரையாளர் மவரீன் டவுட், கைகுழுக்குவது ஒரு காட்டுமிராண்டித் தனமாக நடைமுறை என டிரம்ப் தெரிவி்த்தார். அவரது மேஜையின் மீது ஒரு பாட்டில் கை துப்புரவாளியை ( hand sanitiser ) வைத்திருந்தார். எதற்கு இது என கேட்டதற்கு, கைகுலுக்கிய பின்னர் கை கழுவதற்கு என பதில் அளித்தார் என குறிப்பிட்டுள்ளார். தி கார்டியன் பத்திரிக்கை தனது வாசகர்களுக்கு கொரோனே வைரஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது, The End of Handshake என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் to give up handshakes, hugs, high-fives and cheek kisses. என குறிப்பிட்டு, இதை தவிர்க்க, இந்திய முறைப்படி, இரு கரம்கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும என வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜெர்மன் நாட்டின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் தன்னுடன் தனது உள்துறை அமைச்சர் ஹார்ஸ்ட் சீஹோஃபர் கைகுழுக்க மறுத்துவிட்டார். பிரதமர் மோடி உலக தலைவர்களை சந்திக்கும் போது, கட்டிப்பிடிப்பதை நிறுத்தியிருக்க வேண்டும் என வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தார். கடந்த வாரம் இஸரேல் நாட்டின் பிரதம மந்திரி திரு. பெஞ்சமின் நெதன்யாகு, தனது நாட்டு மக்களை கை குலுக்கி வரவேற்பதை தவிர்த்து கை கூப்பி நமஸ்தே கூறும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கை கூப்பி வணக்கம் சொல்வதால், கொடுமையான வோவைட் -19 நோயிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒரு வழியாகும் என குறிப்பிட்டு, இருகரம் கூப்பி வணக்கம் சொல்வது எப்படி என்பதை செயலாக்கம் மூலம் இஸ்ரேல் பிரதமர் செய்து காட்டினார். இந்திய பிரதமர் திரு. மோடி அவர்கள் பயணாளிகளுக்கு வீடியோ கான்பனை்சிங் மூலமாக இந்திய நாட்டின் பழைமைய கலாச்சாரமான இரு கரம் கூப்பி நமஸ்தே கூறுவது, கொடிய நோயான கொரோனவிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும் என பேசியுள்ளார்.
உலக தலைவர்கள் மத்தியில் நமஸ்தே கூறுவது பெருகி வருகிறது. ஒரு கொடிய தொற்று நோயான கோவைட் -19 லிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இந்தியாவின் தொன்மையான பழக்கமான இரு கரம் கூப்பி நமஸ்தே கூறுவது பாதுகாப்பான ஒன்று என வெளிப்படையாகவே கூற துவங்கியுள்ளார்கள். சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானவல் மேக்ரோன், ஸ்பெயின் நாட்டு அரசர் ஃபெலிப் மற்றும் அரசி லெடிசியா ஆகிய இருவரையும் பாரீஸ் Elysee அரண்மனையில் வரவேற்றப்போது, இந்திய முறைப்படி இரு கரங்களை கூப்பி வரவேற்றார். இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சார்ந்த இளவரசர் சார்லஸ் லன்டனில் நடந்த காமவெல்த் நிகழ்வில் கலந்து கொண்டு கை குலுக்குவதற்கு பதிலாக இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தினார். 2020 மார்ச் மாதம் 9ந் தேதி மெல்போர்ன் நகரில் நடந்த வரவேற்பில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவரது மனைவி கமீலாவும் இரு கரங்களை கூப்பி வரவேற்பை ஏற்றுக் கொண்டார்கள்.
ஐரோப்பிய நாடுகளின் சுகாரத அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு ஒருவருக்குவொருவர் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும் . வாழ்த்து சொல்வதில் கூட கைகுலுக்கவதற்கு பதிலான இந்தியாவில் நடைமுறையில் உள்ள இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. புது டெல்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதர் இமானுவல் லெனியன் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரோன் to greet all his counterparts with a Namaste, a graceful gesture என கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் கொரோனா வைரஸ் கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள இத்தாலிய தூதரகம், டுவிட்டரில், கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இந்தியாவும் இத்தாலியும் கூட்டாக செயல்படுகிறது என கூறி, இறுதியில் இரு கரம் கூப்பி நமஸ்தே என குறிப்பிட்டுள்ளார். சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், ஸ்பெயின், ருமேனியா, போலந்து, ஈரான் மற்றும் ஐக்கிய அரவு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் கைகுலுக்களு்ககு எதிரான எச்சரிக்கையுடன் , நமஸ்தேவின் நற்பண்புகளை மேம்படுத்துவதற்கான உலகளாவிய பிரச்சாரத்தை செய்ய துவங்கியுள்ளார்கள்.
இந்தியாவின் நற்பண்புகளை கிண்டலும் , கேலியும் பேசியவர்கள், உலகத்தை அச்சுறுத்தும் கொரோனே நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள இரு கரம் கூப்பி வணக்கம் சொல்வது சிறந்த முறை என்பதை உணர்ந்து கொண்டார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள நாத்திக வாதிகள் வாய் திறக்காமல் மௌனம் காப்பது, தங்களின் கொள்கைக்கு ஆபத்து வந்துவிட்டது என்ற அச்சமே காரணமாகும்.