கேரளத்தில் கன்னியாஸ்திரி மடத்தில் இருந்த இளம் கன்னியாஸ்திரி கொல்லபட்ட வழக்கில் நீதி வென்று பாதிரியும் அவரின் காதலி ஸ்திரியும் உள்ளே தள்ளபட்டாயிற்று இந்த வழக்கில் பெரும் சுவாரஸ்யமும் அதிர்ச்சியும் உண்டு, 1992ல் நடந்த சம்பவத்தை காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் இழுத்து கொண்டே சென்றார்கள், டெல்லியில் அவர்கள் அதிகாரம் இருந்த வரை நீதி என்பது ஆழ குழிதோண்டி புதைக்கபட்டது. இந்த வழக்கில் மனித உரிமை கழக அமைப்பும், அபயாவின் குடும்பமும் மிக கடுமையாக போராடியது, கிட்டதட்ட இரு சி.பி.ஐ குழுக்கள் வழக்கை நிரூபிக்க முடியாமல் தோற்றன, சாட்சி இருந்தும் நீதிமன்றம் வழக்கை குற்றவாளிகளுக்கு சாதகமாக முடித்தன. வழக்கின் ஒரு முக்கிய சாட்சியால் இம்முறை நீதி நிலை நாட்டபட்டிருக்கின்றது. ஆம் வழக்கின் மகா முக்கிய சாட்சி யார் தெரியுமா? ஒரு திருடன், அடைக்கல் ராஜ் எனும் திருடன்.
திருடுவது அவர் தொழில், அப்படி அந்த மடத்தில் அன்று அதிகாலை திருட செல்லும் பொழுதுதான் ஒரு இளம்பெணை பாதிரி கும்பல் அடித்து கொன்று கிணற்றில் போடுவதை கண்ணால் கண்டான். அதை சாட்சியாகவும் சொன்னான். அவன் நினைத்திருந்தால் தன் திருட்டு அவமானத்துக்கு பயந்து மறைத்திருக்கலாம் இல்லை கோடிகளில் பணம் வாங்கி சொகுசாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவன் வயிற்றுக்கு கொள்ளையிட்டானே தவிர மனசாட்சியினை கொல்ல நினைக்கவில்லை. எவ்வளவோ ஆசை வார்த்தைகள், பணம், வளமான எதிர்காலம், அதையும் தாண்டி கொடும் உயிர் மிரட்டல், வெற்று மிரட்டல் வழக்குகள் என எல்லாம் தாண்டி அவன் நின்றான். ஆம் நான் திருடன் என்மேலான எல்லா வழக்கையும் ஒப்புகொள்கின்றேன். அப்படி இந்த சாட்சியினையும் சொல்கின்றேன் என அவன் நிலைத்து நின்றபொழுது அதர்ம சக்தியால் அசைய முடியவில்லை, மொத்தமாக ஆணி அடித்து வைத்தான்.
தர்மத்தை காக்க திருடன் வடிவில் அனுப்பபட்ட சக்தி அவன். அவனின் வாக்குமூலமே அப்பெண்ணை பாதிரியும் பெரிய ஸ்திரியும் கொன்று கிணற்றில் வீசிய உண்மையினை வெளி கொண்டு வந்திருக்கின்றது. ஆம், இவர்தான் பைபிளை நன்றாக படித்து வாழ்ந்தவர். பைபிளில் இயேசுவோடு சிலுவையில் அறைபட்ட நல்ல திருடன் ஒருவன் உண்டு, இயேசு அவனை வாழ்த்தியபடியேதான் உயிர்துறந்தார். பைபிளை 7 வருடம் கற்றும் பெரும் பாவியான அந்த பாதிரியினை விட, அந்த கன்னியாஸ்திரியினை, அட கன்னிதன்மையினை இழந்த பின் என்ன கன்னியாஸ்திரி? ஸ்திரி மட்டும்தான் அந்த ஸ்திரியினை விட இவன் நல்லவன், மாபெரும் உத்தமன் பைபிளே படிக்காமல் கிறிஸ்துவம் காத்த அவன், “உண்மைக்காக உயிர்துறப்பவன் பேறுபெற்றவன்” என இயேசு சொன்னபடி வாழ்ந்த அவன் பேறுபெற்றவன்.
அவன் கால்களில் விழுந்து நல்ல கிறிஸ்தவர்கள் வணங்க வேண்டும், நான் வணங்கி கொண்டிருக்கின்றேன். கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் நாளில் அவனை சிறப்பித்து கொண்டாட வேண்டும், அவனே இன்றைய உலகில் மிக உன்னதமான கிறிஸ்தவன்
அவனை கொண்டாடுதல் வேண்டும். அந்த திருடன் நிச்சயம் பின்னொரு நாளில் பரலோகம் போவான், அந்த கள்ள பாதிரியும் ஸ்திரியும் நரகம் செல்வார்கள். அந்த நரகத்தில் அவர்களோடு தமிழகத்து திருட்டு பாதிரிகளும் ஒரு நாள் நிச்சயம் இணைவார்கள்.