குவியும் நில அபகரிப்பு புகார் அசம் கானுக்கு கடும் நெருக்கடி

சமாஜ்வாதி மூத்த தலைவரும், எம்.பி., யுமான, அசம் கானுக்கு எதிராக, உத்தர பிரதேசத்தில், 27 எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், அசம் கான். உ.பி., மாநிலம், ராம்பூர் தொகுதியின், எம்.பி.,யாக உள்ளார். சமீபத்தில் லோக்சபாவில், பா.ஜ., பெண் எம்.பி., ரமா தேவியை தரக்குறைவாக விமர்சித்து, சர்ச்சையில் சிக்கினார். ஏற்கனவே, முன்னாள் நடிகையும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஜெயப்பிரதாவையும், தரக்குறைவாக விமர்சித்து, சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், பல்கலை கட்டுமான பணிகளுக்காக, தங்கள் நிலங்களை, அசம் கான் அபகரித்து வைத்துள்ளதாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 27 விவசாயிகள், ராம்பூர், எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அசம் கானுக்கு எதிராக, 27 எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.