‘குருவி’யால் வெளிப்பட்ட குணம்!

பொதுவாக மாற்றுக் கட்சி முதல்வர்கள் எளிதில் கருத்து உடன்படுவதில்லை. ஆனால் ஹரியானாவின் பா.ஜ.க முதல்வரும் பஞ்சாபின்  காங்கிரஸ் முதல்வரும் ஒரு விஷயத்தில் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றால் அதை வரவேற்காமல் சும்மா இருக்கலாமா!

ஹரியானாவில் பெண் சிசுக் கொலை தொடரும் கதையாய் இருந்ததால் கருவில் பாலினத்தை கண்டு சொல்லும் ஸ்கேன் மையங்களின் செயலுக்கு தடை விதித்ததோடு கடும் நடவடிக்கையும் மேற்கொண்டார் பா.ஜ.க. முதல்வர் மனோகர் கட்டர். 22 பெரிய பெரிய மையங்கள் மூடப்பட்டன.

காவலன் பெரிசா, கள்ளன் பெரிசா என்பது போல, எத்தர்கள் பக்கத்து மாநிலமான பஞ்சாபிற்கு சென்று பரிசோதனை செய்து, பெண் சிசுக் கொலையில் ஈடுபடுவது முதல்வர் கட்டரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது சம்பந்தமாக பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங்கை தொடர்பு கொள்ள முடிவு செய்தார் கட்டர். அதிகாரபூர்வமாக கடிதம் ஏதும் எழுதவில்லை. மாறாக, டிவிட்டர் தளத்தில் அமரீந்தருக்கு ஒரு கோரிக்கை விடுத்தார்: பஞ்சாப் முதல்வராகிய தங்களுக்கு நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். தங்கள் மாநிலத்தில் உள்ள ‘கருவில் பாலினத்தை கண்டறியும் மையங்கள்’ மீது கடும் நடவடிக்கை எடுத்து எதிர்கால இந்தியாவை ஒளிமயமாக்குங்கள்” என்பதே அந்த டிவிட்டர் செய்தி.

என் மாநிலத்திலா? அப்படியா, கிடையவே கிடையாது. இது பாஜகவின் பொய் பிரச்சாரம்” என்றெல்லாம் அரசியல் செய்யாமல் மிக நேர்மையாக சமூக அக்கறையோடு அதே டிவிட்டரில் பதில் தந்தார் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர்: இதை என் பார்வைக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி கட்டர்ஜி. உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன். என் பதவிக் காலத்தில் அவைகளை இல்லாமல் செய்துவிடுகிறேன்.”

டிவிட்டர் தளத்தில் இந்த கடிதப் பரிமாற்றத்தை குறித்து நெட்டிசன்கள், நல்ல வேளை பஞ்சாபில், ஆம்ஆத்மி வெற்றிபெறவில்லை, இல்லையேல் இதுவும் அரசியல் ஆகியிருக்கும்” என்று மகிழ்ச்சி தெரிவித்தனர். மின்னணு நிர்வாகத்தில் எதிரெதிர்கட்சிகளின் இந்த இணக்கத்தை நாமும் பாராட்டலாமே!

 

‘குருவி’ மூலம் வெடித்த குண்டு!

சோனு நிகம். இவர் ஹிந்தி திரைப்பட பின்னணிப் பாடகர். சமீபத்தில் டிவிட்டர் தளத்தில் இவர் வெளியிட்ட கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படி என்ன  கூறிவிட்டார் இவர்?

கடவுள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. நான் முஸ்லிம் அல்ல. அதிகாலை வேளையில் ஒலி பெருக்கி மூலம் தொழுகைக்கு அழைக்கும் ‘அஸான்’ எனக்கு எதற்கு? மதரீதியாக கட்டாயப்படுத்தும் இதுபோன்ற செயல் இந்தியாவில் எப்போது நிற்கும்?” என்று கூறியிருந்தார். அடுத்தடுத்த டிவிட்களில் கோயில்களில், சர்ச்சுகளில் தவறாக பயன்படுத்தும் ஒலிபெருக்கி உபயோகம் பற்றியும் குறை கூறியிருந்தார். அதோடு, முகமது நபி காலத்தில் மின்சாரம் இல்லை. நான் ஏன் இந்த நாசகார ஒலியில் துயில் எழ வேண்டும்?” என்றும் டிவிட் செய்தார். போதாதா, மதசார்பின்மை காப்பாளர்களுக்கு?

சோனு நிகம் மீது பிரபல பத்திரிகையாளர் சேகர்குப்தா, பெண் பத்திரிகையாளர் ராணா அயூப் உட்பட பலர் தனிப்பட்ட முறையில் தாக்குதல் டிவிட் வெளியிட்டனர். அப்படி வெளியிட்ட எல்லோரும் மோடி எதிர்ப்பாளர்கள். இதனால் ஊக்கம் அடைந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருங்கிணைந்த மாநில சிறுபான்மை கவுன்சிலின் துணைத் தலைவரும் அடெஃப் அலி அல் கொதரியின் பொறுப்பாளரும் மௌல்வியுமான செய்யத் ஷா என்பவர் சோனு தலையை மொட்டை அடித்து ஊர்வலம் நடத்துபவருக்கு ரூபாய் பத்து லட்சம் பரிசு வழங்கப்படும் என ‘ஃபத்வா’ அறிவித்தார். பிரச்சினை சூடு புடித்தது.

சோனு நிகம் விடவில்லை. இன்று மதியம் இரண்டு மணிக்கு என் வீட்டிற்கு வந்து 10 லட்சம் வழங்கிவிட்டு எனக்கு மொட்டை அடித்து செல்ல செய்யத் ஷாவை வரவேற்கிறேன்” என டிவிட் செய்தார். ஒன்றும் ஆகவில்லை. பார்த்தார், தானே மொட்டை அடித்து, அந்த புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு, செய்யத் ஷா, எங்கே என் பத்து லட்சம்?” என்றார். பத்து லட்சம் வரவில்லை, ஆனால் தொடர்ந்து வசவுகள் வந்தன. ஒரு அளவிற்கு மேல் பொறுக்க முடியாத சோனுவின் ரசிகர்கள் தாங்களும் மொட்டை அடித்து, ’ஐ ண்ணாச்ணஞீ தீடிணாட குணிணத ‡டிஞ்ச்ட்’ என தங்கள் தங்கள் மொட்டை புகைப்படத்தை டிவிட்டரில் பதிவேற்றினர்.

ஓரிரு இடங்களில் சோனு நிகமிற்கு ஆதரவாக டிவிட் வெளியிட்டவர்கள் முஸ்லிம் மதவாதிகளால் தனிநபர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். மத்திய பிரதேசம் உஜ்ஜயினியில் உள்ள சிவம் ராய் மோசமாக தாக்கப்பட்டார். அவருடன் சென்ற நண்பர்கள் அவரைவிட மோசமாக தாக்கப்பட்டனர். இது சம்பந்தமாக முஸ்லிம் சிலரை காவல்துறை கைது செய்துள்ளது.

சாவுக்குத்தான் மொட்டை அடிப்பார்கள், இங்கே, ‘மதச்சார்பின்மை’ செத்துவிட்டது, முஸ்லிம் மதவாதம் பெருகிவிட்டது என்பதற்காக தான் சோனுவும் அவர் ஆதரவாளர்களும் மொட்டை அடித்துள்ளனர் போலும்!

 

‘நேஷன் வான்ட்ஸ் டு நோ’

டைம்ஸ் நவ் டிவியில் பணியாற்றிய அர்ணாப் கோஸ்வாமி தனது கேள்விகளின்போது ‘நேஷன் வான்ட்ஸ் டு நோ’ (தேசம் அறிய விரும்புகிறது) என்று கேட்பதுண்டு. தற்போது அவர் துவங்கியுள்ள ‘ரிபப்ளிக் டிவி’யிலும் இதே வார்த்தைகளை பயன்படுத்தி கேள்வி கேட்டிருக்கும் ஒளிப்பதிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த வார்த்தைகளை எங்களைத் தவிர வேறு சானல்கள் உபயோகிக்கக் கூடாது” என டைம்ஸ் நவ் அர்ணாபிற்கு வக்கீல் தாக்கீது அனுப்பியுள்ளது. பதிலுக்கு அர்ணாப், இந்த வார்த்தைகள் யாருக்கும் சொந்தமானவை அல்ல, எனக்கும் டைம்ஸ் நவ்விற்கும் கூட சொந்தமல்ல, யாரும் இதை உபயோகப்படுத்தலாம். யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது” என பதில் அனுப்பியுள்ளார்.

டைம்ஸ் நவ்விற்கு என்னதான் ஆகிவிட்டது? நேஷன் வான்ட்ஸ் டு நோ!”