குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதில் தோற்றுப்போன எதிர்க்கட்சிகள் மக்களிடையே பொய்யை சொல்லி குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றிகொள்ள முயலுகிறார்கள்.கடந்த 70 ஆண்டுகளாக நமது அண்டைநாடுகளில் வசித்த சிறுபான்மை இந்துக்கள் கிறிஸ்தவர்கள்,
பார்சிகள், சீக்கியர்கள் , ஜைனசமயத்தவர்கள் எல்லாம் தங்களது உயிரை, உடமையை சொந்தபந்தங்களை காப்பற்றிக் கொள்ள நமது நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர் . அப்படி அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களில் முஸ்லிம்களை தவிர பிற சமயத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க புதிய சட்ட திருத்த மசோதா வழிவகை செய்துள்ளது. இதனால் நமது நாட்டை நம்பி வந்த அகதிகளுக்கு குடியுரிமையும் கிடைப்பதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்க்கையும் நிம்மதியும் கிடைக்கும்.
சட்ட திருத்ததத்தை இந்தியாவில் ஏற்கனவே குடியுரிமையுடன் வசித்து வரும் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்பது போல் எதிர்க்கட்சிகள் பூச்சாண்டி காட்டி அவர்களை அரசுக்கு எதிராக போராட தூண்டி வருகின்றனர் . இந்த சட்டம் மூலம் சட்டவிரோதமாக நமது நாட்டிற்குள் நுழைந்த கள்ளகுடியேறிகள் தங்களது ஆதாரமான அடையாளத்தை
காட்டாமல் குடியுரிமையை பெறமுடியாது என்பதாலும் ஏராளமான வங்கதேச முஸ்லிம்கள் இப்படி சட்ட விரோதமாக எல்லைதாண்டிவந்துஇங்கு குடியிருப்பதால் அவர்களை அடையாளம் கண்டு வெளீயேற்றிவிடுவார்கள் என்ற அச்சத்தால் இந்த புதிய சட்டத்தை உள்ளூர் முஸ்லிம்களின் துணையுடன் எதிர்க்கிறார்கள் .அதற்கு இந்திய முஸ்லிம்களும் துணைபோகிறார்கள் . இந்த பிரச்சனையால் நாடு முழுவதும் அமைதியாக இருக்கும் போது அசாம் மேற்குவங்காளம் பீகார் தமிழ் நாடு கேரளா போன்ற சட்டவிரோத குடியேறிகள் அதிகமாக வாழும் பகுதிகளில் எதிர்ப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளார்கள் . இவர்களின் நோக்கம் இந்த சட்டத்தை எதிர்ப்பதல்ல தற்போது எழுந்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கரணம் காட்டி அடுத்து வரவிருக்கும் தேசிய குடியுரிமை சட்டத்தை முடக்குவது என்பதே உண்மை .அனால் இந்த அரசு எந்த கொம்பனாலும் அடக்க முடியாத மனோதிடத்தை மக்களிடம் இருந்து பெற்றுள்ளது. மக்களின் முழு ஆதரவோடு நடைபெறும் இந்த ஆட்சியில் 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் தவறுகள் அலங்கோலங்கள் சரிசெய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார் .
இந்த சட்டத்தை அசாம் மக்கள் எதிர்ப்பதற்கும் மேற்குவங்காளத்தினர் எதிர்ப்பதற்கும் வேறுபாடு உள்ளது அஸ்ஸாமில் ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் அசாம் குடியுரிமை சான்று சரிபார்ப்பு திட்டம் மூலம் 2018ம் ஆண்டு 44 லட்சம்பேர் அந்நியர்கள் என்று கண்டறியப் பட்டுள்ளார்கள். இவர்கள் மேல்முறையீடு மூலம் 19 லட்சம்பேர் அந்நியர் என்று கண்டறியப்பட்டுள்ளனர் . இந்த புதிய குடியுரிமை சட்ட திருத்த மசோதன் மூலம் 30 ஆண்டுகால போராட்டம் மூலம் கண்டறியப்பட்டுள்ள அந்நியர்கள் மீண்டும் நமது நாட்டினர் ஆகிவிடும் சூழ்நிலை உள்ளதே என்ற பயத்தில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாய் அஸ்ஸாம் பற்றியெரியும்போது
பராக்கா சமவெளிமட்டும் மகிழ்ச்சியில் உள்ளது என்றால் அந்த பராக்கா சமவெளியில் ஊடுருவல் பங்காளதேசிகள் சட்டவிரோதமாக அகதிகளாக வந்து குடியேறிவசிக்கிறார்கள் . இப்படி அஸ்ஸாம் இரண்டு வித மனோநிலையில் உள்ளது .
பக்கத்துக்கு மாநிலமான மேற்குவங்கத்தில் இந்த சட்டத்தை கொண்டுவரவேண்டும் என்று நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் போர்க்கொடி தூக்கிய மம்தா இன்று அந்த சட்டத்தை எதிர்க்கிறார். ஏனென்றால் தனது கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஊடுருவல்காரர்களுக்கு ரேஷன் கார்டு ,வாக்காளர்
அடையாள அட்டை ஆதார் கார்டு என பல்வேறு குடியுரிமைக்கு தேவையான ஆதாரங்களை வழங்கி அவர்களை தங்களது ஓட்டுவங்கியாக பயன்படுத்தி வந்தது. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இந்த சட்டவிரோத ஊடுருவல்காரர்களை எதிர்த்து ஆட்சிக்கு வந்த மம்தா ஆட்சி பொறுப்பேற்றதும் அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள எதிர்க்கட்சியான கம்யூனிஸ்டின் கொள்கைகளை கடைபிடிக்க துவங்கினார். இதன் மூலம் பங்காளதேசிகள் சட்டவிரோதமாக உள்ளே வந்தாலும் அவர்கள் பங்களாக்கள் (வங்காளிகள்) என்று அவர்களை ஆதரிக்க தொடங்கினர் இதே மம்தா அஸ்ஸாமில் பரக்கா பள்ளத்தாக்கில் குடியேறியவர்களை வங்காளத்திற்கு ஏற்றுக்கொள்ள மறுத்து அவர்களை அசாமிலிருந்து விரட்டியடிக்க முயற்சி என்று குரல் கொடுக்கிறார் அதேவேளையில் பங்களாதேஷில் இருந்து வரும் முஸ்லிம்களை
வங்காளிகள் என்ற பெயரில் அனுமதிக்கிறார் இப்படி இரட்டை நிலைப்பாட்டினை எடுத்துள்ள மம்தா தற்போது மூன்று நாட்களாக மாநிலம் முழுவதும் எதிர்ப்பு பேரணி என்ற பெயரில்தனது கட்சிக்காரர்கள் மூலம் மக்களை உணர்ச்சிவசப்படவைக்க வன்முறையை தூண்டும் வகையில் தானே முன்னின்று நடத்தி வருகிறார் .அந்த பேரணிகளில் உள்ளூர் ஊடுருவல் பங்காளதேசிகளே அதிக அளவில் கலந்து கொள்கிறார்கள் . இதன் மூலம் மத்திய அரசை மிரட்டி பணிய வைக்கலாம் என்று எண்ணுகிறார்.
சென்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பா ஜ கவிடம் வாங்கிய பலத்த அடியை மனதில் வைத்து கொண்டு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள முதல்வரே போராட்டத்தை முன்னின்று நாலாந்தர தெருப்பொறுக்கி போன்று பேசுவதும் மக்களை தூண்டிவிடுவதும் அவரது பொறுப்பிற்கு அழகல்ல என்பதே உண்மை. தனது பத்து ஆண்டுகால ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தடைக்கல்லாக எதிரியாக உருவெடுத்துள்ள பாஜகவை தடுத்து நிறுத்த தேசவிரோதமாய் கள்ளத்தனமாக குடியேறிய பங்காளதேசி
முஸ்லிம்களின் உதவியை நாடுகிறார் அவரது சுயநலத்திற்க்காக நாட்டுமக்களின் நலனை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம் . இன்று அவர் எடுத்துள்ள முடிவால் உள்ளூர் வங்காள இந்துக்கள் பங்களாதேஷி முஸ்லிம்களால் துன்புறுத்த படுவதும் கொடுமைப்படுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. சொந்த மாநில மக்களை தனது ஓட்டு வங்கிக்காக பலிகொடுக்கும் மம்தாவின் மமதைக்கு வங்காளி மக்களே பதிலடி கொடுக்கும் காலம் விரைவில் வரும் மம்தா அவரது அதுவரை இஷ்டப்படி ஆடட்டும்
டெல்லியில் ஆம் அத்மீ கட்சியின் எம் எல் ஏ ஒருவரின் தூண்டுதல் பேரில் ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டத்த்தை தூண்டுகின்றனர். இந்த சட்டத்தால் ஏற்கனவே நமது நாட்டின் குடிமக்களாக இருக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதனை மறைத்து மோடி அரசு எல்லா முஸ்லிம்களையும் விரட்டியடிக்க உள்ளது அதனை எதிர்த்து போராட வாருங்கள் என்று பொய்யான தகவலை சொல்லி போராட்டத்தை நடத்தி வருகின்றனர் போராட்டத்தால் பொதுச்சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தடுத்த போலீசாரின் மீது கல்லெறிவது பேருந்துகளுக்கு தீவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை எப்படி கையாளவேண்டும் என்று இவர்கள் எண்ணுகிறார்கள் . வன்முறையாளர்களை மாணவர்கள் என்று சொல்லி பாதுகாக்க முடியாது வன்முறையின்போது கைது செய்யப்பட்ட 40 நபர்களில் 12 பேர் மாணவர்களே இல்லை என்று
டெல்லி போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார் . எப்படி ஒரு சட்டத்தினால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் நியாயமான முறையில் அமைதியாக போராட ஆயிரம் வழிகள் உள்ளது . தேவை இல்லாமல் வன்முறையில் ஈடுபடுபவர்களை மாணவர்கள் என்றால் விட்டுவிடலாமா? சரி மாணவர்கள் என்ன அவர்களது பிரச்னைக்காகவா
போராடுகிறார்கள் பக்கத்துக்கு பெரும்பான்மையான முஸ்லீம் நாடுகளில் இருந்து அவர்களால் பாதிக்கப்பட்டஇந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்படும் குடியுரிமையை முஸ்லிம்களுக்கும் கோருவது எப்படி நியாயமாக இருக்கும். மத அடிப்படியில் நமது நாட்டை பிரித்து தனியாக சென்றவர்கள் எப்படி மத அடிப்படியில் குடியுரிமை கோர முடியும் இந்த போராட்டம் திட்டமிட்ட ரீதியில் உள்ளூர் முஸ்லீம் அடிப்படைவாத கும்பல்களுக்கு முஸ்லீம் மாணவர்களை பெரும்பான்மையாக கொண்ட சிறுபான்மை கல்விநிறுவனங்கள் இதனை பின்னால் இருந்து ஊக்குவிக்கின்றன. தனாலதான் சென்னை லயோலா கல்வி நிறுவனத்திலும் ராயப்பேட்டை புதுக்கல்லுரியிலும் நடைபெறுகிறது. கேரளாவிலும் அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் இந்த பிரச்சனையில் ஒன்றிணைந்துள்ளார்கள் . மாநிலத்தின் பலபகுதிகளில் சட்டவிரோதமாய் வந்து குடியேறியுள்ள பங்காளதேசிகளையும்,பர்மாவிலிருந்து கலவரம் செய்ததால் விரட்டியடிக்கப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்களையும் பாதுகாத்து தங்களது பெரும்பான்மையை காப்பாற்ற சிறுபான்மை மதத்தினரான கிறிஸ்தவ முஸ்லீம் மக்களின் திட்டமிட்ட சாதி இது எனவே தமிழக ஹிந்து மக்களும் இவர்களின் கொல்லைப்புற திட்டத்தை புரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . தமிழகத்து தி மு
கவும் தனது ஓட்டுவங்கியான சிறுபான்மை முஸ்லிம்களை திருப்திப்படுத்த சட்டவிரோத குடியேறிகளை பாதுகாக்க எதிர்ப்பு பேரணிகளை ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமிழக மக்களை திசைதிருப்ப முயலுகிறது. இந்த போராட்டத்தினால் எந்த சட்ட விரோத குடியேறிகளும் தப்பப்போவதில்லை . போராடியும் பயனில்லை என்பதே உண்மை.