ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் உள்துறைஅமைச்சர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர்பிரிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அறிவிக்கப்படடுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறும் போது,“ மத்திய அரசின் முடிவு மிகவும் துணிச்சலானது. நாட்டின்நலனுக்கு மிக மிக அவசியமான முடிவு” என்று தெரிவித்தார்.ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் டுவிட்டர் பக்கத்தில்வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ அரசின் துணிச்சலான முடிவை நாங்கள் உளப்பூர்வமாக வரவேற்கிறோம். ஜம்முகாஷ்மீர் உள்பட நாட்டு நலனுக்கு அவசியமான முடிவு இது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்வானி கூறும் போது, காஷ்மீர்விவகாரத்தில் தேசிய ஒருங்கிணைப்புக்காக வலிமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370- ஐ நீக்கும்மத்திய அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் ட்விட்டரில் ஒரு தகவலை பதிவிட்டு உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பழையபுகைப்படத்தை போட்டு, 370 சட்டப்பிரிவு நிகழ்வில் “வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது” என்ற செய்தியுடன் வெளியிட்டார்.
“என்ன ஒரு மகத்தான நாள். இறுதியாக ஜம்மு காஷ்மீரை இந்திய ஒன்றியத்தில் ஒருங்கிணைப்பதற்காக டாக்டர் ஷியாம் பிரசாத்முகர்ஜியுடன் தொடங்கி ஆயிரக்கணக்கான தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள், மேலும் ஏழு தசாப்தங்களாக பழைய நாடுமுழுவதும் நம் கண்களுக்கு முன்பாக உணரப்பட வேண்டும்; உங்கள் வாழ்நாளில், எப்போதாவது கற்பனை செய்தீர்களா?” என கூறிஉள்ளார்..
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சிவசேனா கட்சி வரவேற்றுள்ளது. மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பாக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவிக்கையில், தைரியமான மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த முடிவு என கூறியுள்ளார்.
“ஒரு தைரியமான மற்றும் வரலாற்று முடிவு. நம்முடைய கிரேட் இந்தியாவுக்கு – ஒரே இந்தியாவுக்கு வணக்கம்செலுத்துவோம் ” என கூறியுள்ளார்.