ஜம்முகாஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தலில் மொத்தமுள்ள 280 தொகுதிகளில் பாஜக தனியாகவும் எதிர்கட்சிகள் குப்கர் கூட்டணி என்ற பெயரில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம், அவாமி தேசிய மாநாட்டு கட்சி, கம்யுனிஸ்டு, உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தது இந்த தேர்தலில் பாஜக 74 இடங்களிலும் எதிர்கட்சிகளின் குப்பகர் கூட்டணி 112 இடங்களிலும் வென்றுள்ளது. 49 இடங்களில் சுயேட்சைகள் வென்றுள்ளது. இந்த தேர்தலின் மூலம் ஜம்மு பிராந்தியத்தில் 10ல் 6 மாவட்டங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மேலும் காஷ்மீர் பகுதியில் குப்கர் கூட்டணி 9 மாவட்டங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள 5 மாவட்டங்களில் சுயேட்சைகளின் ஆதிக்கம் உள்ளது. மொத்தத்தில் ஆர்டிகல் 370 நீக்கத்திற்கு பின்னர் நடைபெற்ற தேர்தலில் 52% மக்கள் முன்வந்து வாக்குபதிவை செய்திருந்தனர். மேலும் காஷ்மீர் சமவெளிபகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் அதிக அளவில் மக்கள் வந்திருந்து வாக்களித்தனர்.
குறிப்பாக கடந்த 70 ஆண்டுகளாக வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்த வால்மீகி சமுதாய மக்கள் முதன்முறையாக வாக்குகளை செலுத்தினர். அதே போன்று பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்திருந்த சிறுபான்மை இந்துக்களுக்கும் முதல் முறையாக வாக்குரிமை பெற்று வாக்களித்தனர். இந்த மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவு ஜனநாயகம் இங்கு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை குறிக்கிறது.