காஷ்மீரில் இயல்பு நிலை

ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனப் பிரிவு  370 நீக்கப்பட்டு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு 100 நாட்கள் கடந்தவிட்ட நிலையில் அங்கு இயல்பு நிலை திரும்பிவிட்டது. பேருந்துகளும் வாடகை கார்களும் வழக்கம்போல் செல்வதால் சாலைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. பேருந்துகளும் கூட்ட நேரிசலோடு காணப்படுகிறது. சாலைகளில் வாகன நெரிசலால் மக்கள் குறித்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடைகளும் வணிக நிறுவனங்களும் நாள் முழுவதும் இயங்க ஆரம்பித்துவிட்டது. மாநகர் பகுதிகளில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நெரிசலை சரி செய்வதற்கு அவதிப்படுகிறார்கள். இயல்பு நிலை திரும்பி விட்டதால் காஷ்மீர் பகுதியில் இனி தொழில் முன்னேற்றம் அடைய ஆரம்பித்துவிடும் என்று அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்கள்.