ஐநாவுக்கு பாகிஸ்தான் எழுதிய கடிதத்தில், காங்கிரஸும் இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் காங்கிரசும் திமுகவும் தேசத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. எதிர்க்கட்சி என்பது எதிரி கட்சியாக எதிரி நாட்டுக்கு ஆதரவாக செயல்பட கூடாது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாரதத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரித்து உள்ள நிலையில் காங்கிரசும் திமுகவும் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தது. திமுக ஒருபடி மேலே சென்று டெல்லியில் போராட்டம் நடத்தியது. 370 சட்டப்பிரிவை பாரதம் ரத்து செய்ததற்கு உலக நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்தது பாரதத்தில் உள்ள பிற எதிர்க்கட்சிகளும் சட்டப்பிரிவு 370 நீக்கியதற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக எதிர்ப்பு தெரிவித்ததை பாகிஸ்தானிலுள்ள சில ஊடகங்கள் திமுகவை பாராட்டி செய்தி வெளியிட்டது.