சுயமரியாதையுள்ள ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டால் அவள் தற்கொலை செய்து கொள்வாள். மீண்டும் நடக்க அனுமதிக்க மாட்டாள் என கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசியுள்ளார். இந்த கருத்து சர்ச்சையானதால் மன்னிப்பு கேட்டுள்ளார். இதற்கு கேரள பெண்கள் கமிஷன் கண்டனம் தெரிவித்ததுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. முன்னதாக ராமச்சந்திரன் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவை ‘கோவிட் ராணி’ என விமர்சித்திருந்தார்.
உத்தரபிரதேச காங்கிரஸ் மாவட்ட தலைவர் அனுஜ் மிஸ்ரா பெண்களை கிண்டல் செய்த்தால் பாதிக்கபட்ட பெண்கள் அவரை செருப்பால் அடித்து துவைத்து போலீசில் புகார் அளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தும் பாஜகவின் பட்டியல் இன பெண் தலைவர் இமார்டி தேவியை தரக்குறைவாக விமர்சித்து இருந்தார்.