அன்புடையீர், வணக்கம்.
காமராஜ் தமிழக முதல்வராக இருந்தபோது நடைபெற்ற ஒரு சம்பவம். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி காமராஜரிடம் ஒரு கோப்பைக் கொடுத்து அதில் உள்ள பத்து மாணவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்து கொடுத்தால் அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதி கிடைக்கும். இது முதல்வருக்கான கோட்டா என்று தெரிவித்தனர்.
பொதுவாக அந்தக் கோப்பைப் பார்த்து படித்து 10 மாணவர்களைத் தேர்ந்தெடுக்க குறைந்தது இரண்டு மணி நேரமாகும். ஆனால் காமராஜரோ ஒரு சில நிமிஷங்களில் அதில் 10 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து கொடுத்துவிட்டார். இதைப் பார்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆச்சரியம். ஐயா இவ்வளவு விரைவில் எந்த அடிப்படையில் பத்து பேரைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று பணிவுடன் கேட்டார்.
அதற்கு காமராஜர் நான் ஒவ்வொரு அப்ளிகேஷனாகப் பார்த்தேன். அதில் தந்தை கையொப்பம் என்ற இடத்தில் கையெழுத்துப் போடாமல், யார் யாரெல்லாம் கைநாட்டு (எழுத படிக்கத் தெரியாதவர்கள் விரல் ரேகையை பதிப்பது) போட்டிருந்தார்களோ அவைகளைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார்.
ஆஹா… காமராஜருக்குத்தான் எவ்வளவு நல்ல மனது. படிக்கத் தெரியாதவன் பிள்ளைகள் படிக்கட்டும் என்று முடிவெடுத்த காமராஜ் முதல்வராக வாழ்ந்தது நம்ம தமிழ் நாட்டில்தான்.
– சு.கி. சிவம் முகநூலில்
காமராஜ் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று கூறிவரும் தமிழக காங்கிரஸ், திமுகவுடன் கைகோர்த்துள்ளது வெட்கக்கேடு – கேவலம்.
வாழி நலம் சூழ.
ம. வீரபாகு, ஆசிரியர்