கர்நாடகத்தில் இடைத்தேர்தல் வெற்றியால் ஆட்சியை தக்கவைத்து கொண்ட பா ஜ க

கர்நாடக சட்டசபையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17   எம் எல் ஏ க்களால்  காலியான தொகுதிகளுக்கு  நடந்த இடைத்தேர்தலில் பா ஜ க சார்பில்போட்டியிட்ட முன்னாள் எம் எல் ஏக்கள் 12 பேர் மீண்டும்  தேர்தெடுக்கப்பட்டனர் . ஏற்கனேவே 2018 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 105 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா ஜ கவை ஓரம்கட்டி காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டு சேர்ந்து சந்தர்ப்பவாத ஆட்சியமைத்தது

    இந்த கூட்டணி இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்மக்கள்  கொடுத்த சம்மட்டி அடியால் சிதறுண்டது.  கூட்டணி அரசில் 15 காங்கிரஸ் எம் எல் ஏக்கள்  இரண்டு ஜனதாதள எமில் ஏக்கள்  உள்ளிட்ட  17பேர் அதிருப்ப்தியாளர்களாகி தங்களது பதவியை ராஜினாமா செய்தனர் . அதனை   ஏற்க மறுத்த சபாநாயகர் பலநாட்கள் காத்திருந்து மீண்டும்  கட்சிக்கு திரும்பி வராததால் இடைநீக்கம் என்ற அறிவிப்போடு தானும் சபாநாயகர் பதவியை  ராஜினாமா செய்தார் .

 பின்னர்  சட்டமன்றதில் காலியான 17 எம் எல் ஏக்களால்  பெரும்பான்மையை பெற்ற  பா ஜ  க மீண்டும் ஆட்சி அமைத்தது . பா ஜ க வின் ஆட்சி அமைய காரணமாக இருந்த அதிருப்தியாளர்களுக்கு மீண்டும் பா ஜ கசார்பில் போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கியது . சென்ற வரம் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி  இன்று நடைபெற்றது . இந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்திலிருந்தே 10க்கும் மேற்பட்ட தொகுதியில் முன்னிலையிலிருந்த பா ஜ க முடிவில் 12 தொகுதிகளில் வெற்றிபெற்று கர்நாடக மாநில ஆட்சியை தக்க வைத்து கொண்டது . மேலும் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட்ட 15 தொகுதிகளில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்துள்ளது .
முதல்வர் பதவிக்காக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து பின்னர் அதிருப்ப்தியாளர்களால் பதவியிழந்த குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தான் போட்டியிட்ட அணைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது . தேர்தல் நடந்த அணைத்து தொகுதிகளுக்கும் சென்று நீலிக்கண்ணீர் வடித்தும் பொதுமக்கள் இந்த சந்தர்ப்பவாத கட்சியை துடைத்தெறிந்துள்ளார்கள் .
இந்த இடைத்தேர்தலில்  கர்நாடக வாக்காளர்கள்  சந்தப்பவாதிகளையும்  அயோக்கியர்களை நிராகரித்ததன் மூலம் தங்களது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னால்  முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான  சித்தா ராமையாவும் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் குண்டுராவும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.