கம்யூனிஸ்ட்டுகள் அலுவலகத்தோடு பா.ஜ.கவுக்கு மாற்றம்

கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. கேரளாவில் நடைபெறும் மத பயங்கரவாதம், லவ் ஜிஹாத் போன்றவற்றுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் துணை போகின்றனர், காங்கிரஸ் அதனை தட்டிக்கேட்க முடியாமல் திணறுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட கலமாக அங்குள்ளது. கிறிஸ்தவர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழலில், அதனை தட்டிக்கேட்கும் ஒரே கட்சி பா.ஜ.க தான் என்பதால், தற்போது கேரளாவில் குறிப்பிட்டத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது பா.ஜ.க. இதனால், தொடர்ச்சியாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ள பல முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். இந்த சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்டம் கோவளம் ஏரியா கமிட்டியின் பொறுப்பாளர், தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். அவர் இதுநாள் வரை தனது சொந்த செலவில் ஒரு கட்டடத்தை ஏற்பாடு செய்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமாக செயல்படுத்தி வந்தார். அவர் தற்போது பா.ஜ.கவுக்கு மாறியதால், அந்த அலுவலகம் பா.ஜ.க அலுவலகமாக மாற்றப்பட்டது. இதையடுத்து, அங்கு வரையப்பட்டிருந்த சேகுவாரா படத்தை அழித்து விட்டு தாமரை சின்னத்தை வரைந்தனர் அதன் நிர்வாகிகள். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.