தெலுங்கானா, பீகார், மகாராஷ்டிராவில் கால் பதித்த ஒவைசி தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தமிழகத்திலும் கால் பதிக்க முடிவெடுத்துள்ளார். இவரை பா.ஜ.கவின் ‘பி’-டீம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கூறிவருகின்றன. ஆனால் இவர் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக தன்னை நிலைநிறுத்த முயல்வதையே முந்தைய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தி.மு.க, காங்கிரஸ் ஆதரவாளர்களாக உள்ள முஸ்லிம்களின் ஓட்டை இவர் கணிசமாக பிரிப்பார் என கருதப்படுகிறது. இது ஓரளவுக்கு நல்ல விஷயம்தான் என்றாலும், நீண்ட கால அடிப்படையில் இது மிகவும் ஆபத்தானது. எனவே, தேசநலனை விரும்பும் மக்கள் தி.மு.க கூட்டணியை புறக்கணிப்பது போலவே இவரது கூட்டணியையும் புறக்கணிப்பது தமிழகத்திற்கு நல்லது.