எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரமாக, பாரதம் மற்றொரு முன்நோக்கு நடவடிக்கையை எடுத்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம், ஒரு ஒருங்கிணைந்த கட்டண திட்டத்தை அமல்படுத்துவதை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, அதன் இயற்கை எரிவாயு குழாய்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட கட்டணத்தை அனுமதிப்பதற்காக ஒழுங்குமுறை விதிமுறைகளை திருத்தியது. கீழ்நிலை வழக்கமான ஒரு mmBtu (மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்)க்கு ரூ. 73.93 கட்டணத்தை அறிவித்தது. எரிவாயு மூலத்திலிருந்து 300 கி.மீ வரை, 300 கி.மீ முதல் 1,200 கி.மீ வரை மற்றும் 1,200 கி.மீக்கு அப்பால் உள்ள தூரத்தின் அடிப்படையில் மூன்று கட்டண மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மண்டல கட்டணங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மார்ச் 30 அன்று டுவிட்டரில் “இயற்கை எரிவாயு துறையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தம்” நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பொருளாதார வளர்ச்சியை கொண்டு செல்லும் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது. இந்த நடவடிக்கை பாரதத்துக்கு ‘ஒரே நாடு, ஒரே கட்டத்திட்டம், ஒரே கட்டணம்’ என்ற மாதிரியை அடைய உதவும். மேலும் தொலைதூர பகுதிகளில் உள்ள எரிவாயு சந்தைகளையும் ஊக்குவிக்கும். இதனால், பாரதத்தின் வடகிழக்குப் பகுதிகளில், கட்டணங்கள் கால் பங்காகக் குறைக்கப்படும். கிழக்கில் அது பாதியாகக் குறைக்கப்படும். மத்திய அரசு, நாட்டில் இயற்கை எரிவாயு நுகர்வு குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த எரிசக்தித் திறனில், அதன் பங்கை இப்போது 6.2 சதவீதத்தில் இருந்து 2030க்குள் 15 சதவீதமாக உயர்த்துகிறது” என்று கூறினார். இதனை பிரதமர் நரேந்திர மோடி, “எரிசக்தி மற்றும் இயற்கை எரிவாயு துறையில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தம்” என்று அழைத்தார்.