ஒரே குட்டையில்

சட்டப்பிரிவு 370-ஐ பயன்படுத்தி காஷ்மீரத்தை சுரண்டிப் பிழைத்த கட்சிகள் இணைந்து குப்கர் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களின் நோக்கம் அந்த சட்டத்தை மீண்டும் கொண்டுவந்து சம்பாதிப்பது மட்டுமே.

அதில் இவர்களை போலவே எண்ண அலைவரிசை கொண்ட கட்சியான காங்கிரஸும் தற்போது இணைந்துள்ளது.  இந்த சட்டப்பிரிவை மீண்டும் செயல்படுத்த பாகிஸ்தான் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறது. இதையே காங்கிரஸும் வலியுறுத்துவதால் காங்கிரஸ் தேச விரோத கட்சி என தன்னை  மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

இவர்களுடன் கூட்டணியில் உள்ள திமுகவின் நிலைப்பாடும் இதுதானோ?