ஓரிரு தினங்களுக்கு முன் பெய்த சாதாரண மழைக்கே சென்னை வெள்ளக் காடாகிப்போனது. ரோட்டில் வாகனங்கள் நீச்சலடித்தன. வழக்கம் போல பொதுமக்கள் அவதிப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டு மழையிலும் இது தொடர்கதைதான். இதற்கு என்ன காரணம்?
திராவிட கட்சிகளின் ஆட்சியில் சென்னையை சுற்றிலும் உள்ள ஏரி, குளம், வடிகால், ஆறு என அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டன. பிளாட் போட்டு விற்கப்பட்டன. கூவம் எனும் புனித நதி சாக்கடையாக மாற்றப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்திலும் ஒரு சில ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டன என்றாலும் இவர்களுடைய சாதனைகளுடன் ஒப்பிடுகையில் அது ஒன்றுமே இல்லை.
இதனால் போதுமான அளவு மழை வந்தாலும் அது நீர்நிலையை அடைய வடிகால்கள் இல்லை. தேக்கி வைக்க போதிய இடமுமில்லை.
தாங்கள் செய்த தவறுகளுக்கு தண்டனையாக, மக்களை மழை நீரை வீட்டுக்கு வீடு சேகரிக்க ஆணையிட்டது அரசு. ஆனால் அதை தான் செய்ய மறந்துவிட்டது.
மழைநீர் தேங்காமல் வடிய மழைநீர் வடிகால் ஏற்படுத்தி, அதை வீணாக கடலில் கொண்டு சேர்க்கும் இவர்கள் அந்த நீரை பூமிக்கடியில் தேக்கி வைக்க திட்டம் ஏதும் தீட்டவில்லை. ஒரு திராவிட கட்சியாவது மழை நீர் வடிகால் வசதி செய்யும்போதே 20 அடி தூரத்துக்கு ஒரு மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்குவது, நீர் நிலை மீட்பு, புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குவது குறித்து சிந்தித்திருக்கலாம். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.
ஆட்சியில் உள்ளவர்கள் இதை குறித்து சிந்திக்க வேண்டும். மக்களும் நமக்கு இனிமேலும் இவர்கள் தேவையா என யோசிக்க வேண்டும்.