ஒரு புதிய விஷ ஊற்று போராட்ட பயங்கரவாதம்!

லோக்சபாவில்  குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பெங்களுர் தெற்கு லோக்சபா உறுப்பினர் தேஜஸ்வி சூரியா ”நாம்   உஷாராகவிட்டால் மறுபடி முகலாயர் ஆட்சி வரக்கூடும்” என்று பேசியது ஏன்?   2019 டிசம்பர் குடியுரிமை சட்ட திருத்த மசோத நிறைவேறிய பின்னர்,  முஸ்லிம்களும் பிரிவினைவாதிகளும் போடுகிற ஆட்டமே இவ்வாறு பேசுவதற்கு முக்கியமான காரணம்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடக்கின்ற போராட்டங்கள் வன்முறையில் முடிகின்றன.  இதுவரை 20 பேர் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகியிருக்கிறார்கள்.    குடியுரிமை சட்டத்தினால், இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என தெளிவாக உறுதியாக கூறிய பின்னரும் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்த வேண்டிய அவசியம் என்ன?

மாணவர்கள் மத்தியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான  போராட்டத்தை ஊக்குவிக்கும்  மாணவர் அமைப்புகள், இடதுசாரி கம்யூனிஸ்ட்,  முஸ்லிம் மதவாத மாணவர் அமைப்புகள் கத்தோலிக்க அமைப்புகள் ஆகியவை.     பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் சார்பாக இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு, கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா – இரண்டும் வன்முறையை ஆயுதமாக கொண்டு செயல்படும் அமைப்புகள்;  இவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்புகளும், அனைத்திந்திய கத்தோலிக்க பல்கலைகழக கூட்டமைப்பும் கலந்து கொண்டு,  ஆர்பாட்டங்களை  கலவரமாக மாற்ற சதி செய்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு, அகதிகளாக இந்தியா வந்துள்ள ஹிந்துக்கள், சீக்கியர்கள், பாகிஸ்தானில் சிறுபான்மையிராக இருந்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என அத்வானிக்கு  காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இரண்டும், கடிதம் எழுதியதை மறந்துவிட்டு இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.   1971- மார்ச் மாதம் கிழக்கு பாகிஸ்தான் பங்களா தேஷ் நாடாக மாறிய பின்னர்,  ஊடுருவிய லட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கி விட்டு, ஹிந்துக்களுக்கு குடியுரிமை மறுத்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியாளர்கள். இதைத் தேசம் மறக்கக் கூடாது.

உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் போராட்டத்தை துவக்கினார்கள்.  டிசம்பர் 12ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன், மசோதா சட்டமாகியது.  டிசம்பர் 13ம் தேதி இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல்,  கனடா போன்ற நாடுகள், தங்கள் நாட்டினர் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தின. முஸ்லிம் பயங்கரவாதிகள் அந்நியநாட்டினரை பணயக் கைதியாக பிடித்துக் வைத்துக் கொண்டு, அரசை மிரட்டக் கூடும் என்ற காரணம் தெரிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் 40 ஆண்டுகளாக பாகிஸ்தானில் வசிக்க அனுமதி அளிக்கப்பட்டதை குறிக்கும் வகையில் இரண்டு நாள் அகதிகள் மாநாடு பாகிஸ்தானில் நடைபெற்றது.  மேற்படி மாநாட்டிற்கு  வருகை புரிந்த ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ த்ரோச்சி முன்னிலையில், இந்தியாவின் சில கொள்கை முடிவுகளை சர்வதேச சமூகம் கவனிக்கத் தவறினால், அகதிகள் பிரச்னையை பாகிஸ்தான் மீண்டும் சந்திக்க நேரிடும்;  பாகிஸ்தானை அழித்து ஒழிக்க, இந்திய ராணுவத்திற்கு 11 நாட்கள் போதும் என அந்நாட்டு பிரதமர் சமீபத்தில் பேசினார் என பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் பேசினார்.  இதையும் முன்னிலைப்படுத்தியே, நம்மூர் முஸ்லிம்கள் தங்களின் போராட்டத்தை நடத்துகிறார்கள்.

சென்னை வண்ணாரப்பேட்டையில்…

ஆர்பாட்டமாக துவங்கிய பிப்ரவரி 12 வண்ணாரப்பேட்டை கிளர்ச்சி பின்னர் தடியடி கலவரமாக மாறியது.   பிப்ரவரி 24ம் தேதி வரை சென்னை மாநகர எல்லைக்குள் எவ்வித ஆர்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தக் கூடாது என காவல் துறை தடை விதித்தது.  வண்ணாராப்பேட்டையில் முஸ்லிம் பெண்களை முன்னிறுத்தி நடத்திய போராட்டத்திற்கு முறையாக காவல் துறையிடம் அனுமதி பெறவில்லை.    அனுமதி பெறாமல் நடந்த போராட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் முற்பட்ட போது, ஆர்பாட்டக்கரர்கள் மத்தியி லிருந்து கற்களும் தண்ணீர் பாட்டில்களும் காவல் துறையினர் மீது வந்து தாக்கின.  காவல் துறையினர் தடியடி நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தின் பின்னணியில் தி.மு.க.வும்,  விடுதலை சிறுத்தை கட்சியினரும் முஸ்லிம் அமைப்புகளும் உள்ளன.   போராட்டத்தின் தன்மையை வைத்து இந்த குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் அமைப்புகளும்,  அரசியல் கட்சியினரும் கூட்டாக இணைந்து (காஷ்மீரில் போராட்டக்காரர்கள் பெண் களையும், குழந்தைகளையும் முன்னிறுத்தி, பாதுகாப்பு படையினர் மீது கல்லெறிந்து கலவரத்தை உருவாக்கினார்களே, அதே போல் வண்ணாரப்பேட்டை கலவரம் அமைந்துள்ளது.

 எப்படி 2015-ல் ஆம்பூர் கலவரம் உருவானதோ, அதேபோல் தான் வண்ணாராப்பேட்டை கலவரமும் நடந்துள்ளது.  காவல் துறையினர் தாக்கப் பட்டுள்ளதை கண்டு கொள்ளதாக அரசியல் கட்சிகள் சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, சட்ட விரோத செயலலுக்கும் வக்காலத்து வாங்கும் அவல நிலை உருவாகியுள்ளது. கலவரத்தின் பின்னணியில் இருப்பது தி.மு.க.வும் அவர்களின் கூட்டணி கட்சியினரும் தான் என்ற  குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் தனது டுவிட்டரில்,  சாலை விபத்தில் மரணமடைந்த ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு, வண்ணாரப் பேட்டை கலவரத்தில் போலீஸால் கொல்லப் பட்டார் என்பது போல் பதிவிட்டார்.  இது வரை கட்சியின் தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வில்லை.  ‘கலவரங்களும் கல்வீச்சுகளும் நடந்த பின்னர், தவறாக பதிவிட்டேன், மன்னித்து விடுங்கள்’ என டுவீட் செய்வது  மோசடி.