“ஒரு தேசம் வலிமையான தேசம்” என்பதை வலியுறுத்தி ‘மாரத்தான்’

ஒரு தேசம்; வலிமையான தேசம்’ என்பதை வலியுறுத்தி, தடகள விளையாட்டு வீரர்கள், 60 பேர், கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரை, ‘மாரத்தான்’ ஓட்டத்தை நேற்று துவக்கினர்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, தடகள விளையாட்டு வீரர்கள், 60 பேர், ‘ஒரு தேசம்; வலிமையான தேசம்’ என்பதை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரை, மாரத்தான் ஓட்டம் மேற்கொள்ள முடிவெடுத்தனர்.அதன்படி, 150வது ஆண்டு காந்தி பிறந்த நாளான நேற்று, கன்னியாகுமரி, காந்தி மண்டபம் முன், மாரத்தான் ஓட்டத்தைத் துவக்கினர். குமரியில் இருந்து, காஷ்மீர் லால்சவுக் வரை உள்ள, 3,640 கி.மீ.,யை, 370 மணி நேரத்தில் ஓடி கடக்க, திட்டமிட்டு உள்ளனர்.

‘ஷைனிங் இந்தியா டிரஸ்ட்’ சார்பில் நடத்தப்படும், இந்த மாரத்தான் ஓட்டத்தை, அந்த அமைப்பின் நிறுவனர் சத்பால் பாய், தலைவர் சுரேந்தர் சிங், பா.ஜ., மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.