16.04.2020 ந்தேதி , தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் போடப்பட்ட ஒரு தீர்மானம், கொரோனா வைரஸ் நோயினால் மரணமடைந்தவர்களுக்கு, மாநில அரசு இழப்பீடாக ரூ ஒரு கோடி வழங்க வேண்டும் என போடப்பட்டுள்ளது. தீர்மானத்தை பார்த்தவுடன், இறந்தவர்களுக்கு ஒரு கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என போடப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்த கூட்டணி கட்சியினர், கொரோனா வைரஸ் தொற்று நோய்க்காக மாநில அல்லது மத்திய அரசுக்கு நிவாரண நிதியாக அளித்த விவரங்களை பார்க்க நேரிட்டால், ஒரு கோடி கேட்கும் பலரும் பல கேடிகளாகவே கண்களுக்கு தெரிகிறார்கள்.
வாய் சவடால் விடும் வைகோ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி வழங்கியுள்ளார். எச்சில் பிரியாணிக்காக காத்திருக்கும் திருமா. கூட தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தான் கொடுத்துள்ளார். தேர்தலுக்காக திமுக.விடம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட தொகுதி மேம்பாட்டு நிதியில் அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்கள். 2021-ல் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரசாந்த் கிஷேருக்கு ரூ350 கோடி கொடுத்த திமுக. நிதி அளிக்க முன் வரவில்லை. இலங்கையில் தொழில் துவங்கி கொள்ளையடிக்கும் ஜெகத்ரட்சர்கள், நிதி கொடுக்க முன் வரவில்லை. மருத்துவ சீட் வழங்குவதில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பச்சமுத்து வகையராக்களும் நிதி வழங்கவில்லை. சாராய சாம்ராஜ்ய அதிபதி பாலுவும் நிதி அளிக்க முன் வரவில்லை. இந்த கேடிக்கள் தான் கொரோனா வைரஸ் நோயால் இறந்த இஸ்லாமியர்களுக்கு நிவாரணமாக ரூ ஒரு கோடி வழங்க வேண்டும் என ஒப்பாரி வைக்கிறார்கள். தொகுதி மேம்பாட்டு நிதி என்பது மக்களின் வரிப் பணம், மக்களின் வரிப்பணத்தை தானமாக கொடுப்பதாக விளம்பரம் தேடிக் கொள்ளும் இந்த கேடிகள், ஆட்சியிலிருந்த போது அடித்த கொள்ளையில் ஒரு பங்கு கொடுத்தால் கூட பல ஆயிரம் கோடிகள் நிவாரணமாக கிடைக்கும்.
இறந்தவர்களுக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் பல கேள்விகள் கேட்க தோன்றுகிறது. முதல் கேள்வி கொரோனாவால் பலியானவர்கள் பெரும்பாலோர் முஸ்லிம்கள். இதுவே பலியானவர்கள் இந்துக்களாக இருந்தால், தி.மு.க. இம் மாதிரியான தீர்மானத்தை போடுவார்களா என்பதற்கு பதில் தெரிய வேண்டும். ஏன் என்றால், தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இவர்கள் கொடுத்த இழப்பீடு என்ன என்பதையும் கவனிக்க வேண்டும். ஆழ்குழாய் கிணற்றில் இறந்த கிறிஸ்துவ சிறுவனுக்கு நிதி கொடுக்க முன் வந்த இவர்கள், அதே போல் ஆழ்குழாய் கிணற்றில் இறந்த இந்துக்கு பைசா கூட கொடுக்கவில்லை, மாறாக வழக்கு தொடுக்கப்பட்டது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25ந் தேதியை யாரும் மறந்திருக்க முடியாது. அப்பாவி விவாசாய கூலி தொழிலாளர்கள் 44 பேர்களை ஒரு வீட்டில் பூட்டி தீ வைத்து கொலை செய்த கொடிய சம்பவம். கம்யூனிஸ்ட்களின் முதலைக் கண்ணீர் வடிக்கும் கீழ்வெண்மணியில் நடந்த கொடுமை. தீயில் கருகியவர்களின் குடும்பத்திற்கு ஆட்சியிலிருந்த தி.மு.க. என்ன இழப்பீடு வழங்கியது என்பதை தற்போது நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். கழக கண்மணிகளின் ஆட்சியில் அப்பாவி பொது மக்கள் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் நிகழ்வுகளை பின்னேக்கி பார்க்க வேண்டும். 1972-ல் தூத்துக்குடி மற்றும் சங்கரன்கோவில் வட்டாரங்களில் நடந்த விவசாய போராட்டத்தில் நடத்திய
துப்பாக்கி சூடு, 1980 டிசம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் குருஞ்சாக்குளம் கிராமத்தில் நடத்திய துப்பாக்கி சூடு, 1987- செப்டம்பர் மாதம் 17ந் தேதி வன்னியர்களுக்கு இட ஒருக்கீடு வழங்க கோரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த போராட்டத்தின் போது, பலியான 21 பேர்களுக்க வழங்கிய இழப்பீடு என்ன என்பதையும் ஸ்டாலின் விளக்க வேண்டும்.
1977 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். ஆட்சியில் மெரினா கடற்கரையை அழகுபடுத்த எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு, அருப்புக்கோட்டை அருகே வாகைக்குளத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது துப்பாக்கி சூடு, திருச்சி சிம்கோ மீட்டர் ஆலைத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு, சென்னை வியாசர்பாடியில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு என பல சம்பவங்கள் நடந்த அதில் பலர் உயிரிழந்தனர். அப்படி உயிரழிந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்கட்சியாக இருந்த தி.மு.க. ஏன் குரல் கொடுக்கவில்லை. மீன்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க. முந்தைய ஆட்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஏன் நினைக்கவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் கோடிக்கோடியாக கொள்ளையடிக்கும் இந்த கேடிகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் நினைவில் வருவதில்லை.
கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க கூடாது என போராடிய அண்ணாமலை பல்கலைகழக மாணவன் உதயகுமார் கொல்லப்பட்டதில், அவரது குடும்பத்திற்கு கொடுத்த இழப்பீடு தொகை என்ன ? 1999-ல் மாஞ்சேலை எஸ்டேட் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது நடந்த வன்முறையின் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் உயிரை காக்க குதித்தவர்களில் 17 பேர்கள் நீரில் முழ்கி இறந்தவர்களுக்கு வழங்கிய நிவாரணம் என்ன ? ஏன் என்றால் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள். இந்துக்களின் உயிர்கள் தி.மு.க.வும் அதன் தோழமை கட்சிகளுக்கும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஆனால் சிறுபான்மையினத்தவர்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இறந்து விட்டால், காட்டும் அக்கரை சொல்லி மாளாது. தி.மு.க. வும் அதன் கூட்டணியினரும், கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தொற்று நோயாக பரவியவுடன், போர்கால அடிப்படையில் செய்த உதவி என்ன என்பதையும் சற்றே கவனித்தால் , சேவா பாரதி அமைப்பினரிடம் வன்முறையை பயன்படுத்தி உணவு பொட்டலங்களை கட்டாயப்படுத்தி வாங்கி சுய விளம்பரம் வாங்க துடிக்கும் தி.மு.க.வும் சரி, நிவாரண உதவி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் இவர்களை கேடி என அழைப்பதில் தவறு கிடையாது.