ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியில் பெண்கள்

கேரளாவில் உள்ள தேவாலயங்களில் நடந்த ஞாயிறு பிரார்த்னையின் போது அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டது. அதில் கூறியது

கேரளாவில் உள்ள, சைரோ மலபார் தேவாலயம், சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: கேரளாவிலும், மற்ற தென் மாநிலங்களிலும், சமீபகாலமாக, பெண்களை காதல் வலையில், சிலர் சிக்க வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதில் சில பெண்கள், கொலை செய்யப்படுகின்றனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து, அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள், சமூகத்தின் ஒருமைப்பாட்டுக்கும், அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தும்.

போலீசாரும், புலனாய்வு அமைப்பினரும், இதை, மத ரீதியான பிரச்னையாக அணுகாமல், சட்டம் – ஒழுங்கு பிரச்னையாக கருதி, சம்பந்தபட்ட நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், சைரோ மலபார் தேவாலயத்தின் இந்த அறிக்கை, கேரளாவின் எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நேற்று நடந்த ஞாயிறு பிரார்த்னையின்போது, வாசித்து காட்டப்பட்டது.