ஏ.பி.வி.பி. மாபெரும் வெற்றி

ராஜஸ்தான் உதய்பூர் மோஹன் லால் சுகாதியா பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.  பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் பொறுப்புகளுக்கு நடிபெற்ற தேர்தலில் ஏ.பி.வி.பி மாணவர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.