‘‘குருஜி! நீங்கள் எப்படி அந்த தேநீரைக் குடித்தீர்கள்? தேயிலையை வடிகட்ட அழுக்கடைந்த துண்டை பயன்படுத்தியதை நீங்கள் பார்க்கவில்லையா? அதைப் பார்த்ததும் எனக்கு அருவெறுப்பாகிவிட்டது. நாங்கள் எல்லோரும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி குடிக்க மறுத்துவிட்டோம். ஆனால் நீங்களோ எதுவும் சொல்லாமல் குடித்துவிட்டீர்களே?’’ என்று கேட்டார்.
நீங்கள் எல்லோரும் அந்த துண்டை மட்டும்தான் பார்த்தீர்கள். ஆனால் நான் அவருடைய அன்பையும் எளிய உள்ளத்தையும் பார்த்தேன். எனவே தேநீர் எனக்கு சுவையாகவும் நன்றாகவும் இருந்தது’’ என்று ஸ்ரீ குருஜி பதிலளித்தார். கார்யகர்த்தர்களுக்கு ஒரு புதிய கண்ணோட்டமும் பாடமும் கிடைத்தது.
ஸ்ரீகுருஜி சுற்றுப்பயணம் செய்ய ஒரு கார் ஏற்பாடாகி இருந்தது. ஸ்ரீ குருஜியின் கார் ஒரு சாலையோர சிறு கிராமத்தில் நின்றது. ஸ்ரீ குருஜியைத் தரிசிக்க கிராமத்தினர் சாலையில் திரண்டிருந்தனர். அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த வயதான ஏழை ஒருவர் ஸ்ரீகுருஜியின் முன்பு வந்து ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
‘‘நீங்கள் எங்கள் கிராமத்திற்கு வந்தது கண்டு நாங்கள் எல்லோரும் சந்தோஷப்படுகிறோம். நானோ ஓர் ஏழை. உங்கள் கார் நிற்கும் இடத்திற்கு எதிரில் என்னுடைய குடிசை உள்ளது. உயர்ந்தவரான நீங்கள் என் குடிசைக்குள் வந்து அதை புனிதப்படுத்தினால் நான் பாக்கியவானாவேன்’’ என்று பணிவுடன் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஸ்ரீகுருஜி அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு குடிசைக்குள் நுழைந்தார்.
அந்த கிராமத்து ஏழை. உடனடியாக தரைமீது போர்வையை விரித்து குருஜியையும் அவருடன் வந்த மற்றவர்களையும் அமரும்படி அன்புடன் கேட்டுக்கொண்டார். பிறகு அவர், ‘‘இந்த ஏழை அளிக்கும் தேநீரை அருந்த வேண்டும்’’ என்று வேண்டினார். அந்த ஏழை மனிதர் தன் மனைவியிடம் உடனே தேநீர் தயாரிக்கும்படி கூறினார். அது ஒரே அறை கொண்ட குடிசையாகையால் எல்லாம் வெளிப்படையாகத் தெரிந்தது.
உடனடியாக அந்த அம்மாவும் தேநீர் தயாரிக்கத் துவங்கினார். சில நிமிடங்களில் தேயிலையை போட்டுக் கொதிக்க வைத்தபிறகு, அதை வடிகட்ட ஏதாவது கிடைக்குமா என தேடினார். உடனே அந்த ஏழை மனிதர் தன் தோளிலிருந்த துண்டை பாத்திரத்தின்மீது போட்டு ‘‘இதில் வடிகட்டு’’ என்று தன் மனைவியிடம் கூறினார். நடந்தவை யாவையும் எல்லோரும் பார்த்துக் கொண்டேயிருந்தனர். தேநீர் தயாராகியது.
அந்த குடிசையிலிருந்த குவளைகளில் தேநீரை ஊற்றி எல்லோர் முன்பும் ஒரு குவளை தேநீரை வைத்து அருந்தும்படி அவர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொருவரும் ஏதேதோ காரணம் சொல்லி தேநீரை குடிக்க மறுத்துவிட்டனர். ஆனால் குருஜி குவளையை எடுத்து தேநீரை குடித்தார். அந்த கிராமத்து பாமர ஏழை மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஸ்ரீகுருஜி எழுந்து அவரிடம் விடைபெற்றுக் கொண்டார். கார் பயணித்தது. பயணத்தின்போது ஒரு கார்யகர்த்தர் ஸ்ரீகுருஜியிடம்,

சிறப்பு.