எது பணக்காரத்தேசம்

ஓரு நாட்டின் பணமதிப்பை தங்கத்தை கொண்டே மதிப்பிடுகின்றனர். அந்த வகையில், முக்கிய 11 நாடுகளின் தங்கம் கையிருப்பு பற்றிய தோராய விவரங்கள் (டன் கணக்கில்): அமெரிக்கா –  8133, ஜெர்மனி – 3369, IMF அமைப்பு – 2814, இத்தாலி – 2451, பிரான்ஸ் –  2436, ரஷ்யா – 2150, சீனா –  1874, சுவிட்சர்லாந்து – 1040, ஜப்பான் – 765.2, நெதர்லாந்து –  612, பாரதம் – 608.7 .

இதில் வினோதம் என்னவென்றால், நாட்டின் அரசு கையிருப்பில் உள்ள தங்கம் மட்டுமே பணமதிப்பிற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நாட்டின் மக்களிடம் கையிருப்பாக உள்ள தங்கம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. மக்கள் கையில் உள்ள தங்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் அந்த் நாடுகளின் பண மதிப்பு எவ்வாறு இருக்கும்?

உதாரணமாக: அமெரிக்க  அரசிடம் உள்ள தங்கம் : 8133 டன், அமெரிக்க மக்களிடம் உள்ள தங்கம் : 182, மொத்தம் 8315 டன். பாரத அரசிடம் 608.7 டன்,  மக்களிடம் 25463 டன், மொத்தம் 26071.7  டன்.

மேலே குறிப்பிட்ட 10 நாடுகளின் மொத்த தங்கம் கையிருப்பு 25032 டன்,  பாரத அரசிடம் உள்ளதை சேர்க்காமல், மக்களிடம் மட்டுமே உள்ள தங்கம் 25463 டன். இப்போது சொல்லுங்கள், உலகின் பணக்கார தேசம் எது என்பதை!