ஜனவரி-1 நமக்கு புத்தாண்டா? நம் வீட்டில் உள்ள தினசரி காலண்டரின் பின்பக்கம் பார்த்தால் உண்மை புரியும். ஜனவரி-1 கிறிஸ்தவ பண்டிகை என்று இருக்கும். நம் ஹிந்து மதத்தின் படி, தமிழகத்தில், நம் தமிழர் பண்பாடு கலாச்சாரத்தின் வழியில், சித்திரை ஒன்று தான் நமது புத்தாண்டு. வருட கணக்கிற்காக, ஆங்கில நாட்காட்டி நம் அன்றாட வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. எனினும், அதை நமது புத்தாண்டாக கொண்டாடுவது ஏற்புடையதல்ல. நடுஇரவில் கோயில்களை திறப்பது ஆகம சாஸ்திரத்துக்கு எதிரானது. புத்தாண்டு கொண்டாட்டம் எனும் பெயரில், கேளிக்கை விடுதிகளில் மது அருந்தி ஆட்டம் போடுவது, கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடுவது என்பது கலாச்சார சீர்கேடு. வசந்த காலத்தில் வரும் மங்களகரமான சித்திரை ஒன்றில், பிரம்ம முகூர்த்தத்தில் சூரிய உதயத்தில் இறைவனை வணங்கி தமிழர் மரபுப்படி புத்தாண்டை கொண்டாடுவோம்.
ஆனந்த் ஸ்ரீனிவாசன்